நாளை.. முக்கிய அறிவிப்பு..! ஊரடங்கு நீட்டிப்பு - "எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக மட்டுமே"..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 10, 2020, 04:31 PM IST
நாளை.. முக்கிய அறிவிப்பு..! ஊரடங்கு நீட்டிப்பு -  "எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக மட்டுமே"..!

சுருக்கம்

தற்போது உள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

நாளை.. முக்கிய அறிவிப்பு..! ஊரடங்கு நீட்டிப்பு -  "எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக மட்டுமே"..!

தற்போது உள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.



கொரோனா நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பாதித்த மாநிலங்களில் 2 ஆவது  இடத்தில தமிழகம் உள்ளது. இதன் காரணமாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் என 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.



மேலும் அரசுத்துறை மற்றும் தனியார் சார்ந்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் இன்று முதல்வரை சந்தித்து இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் வெளியிட்டுள்ள பரிந்துரையின்படி, தமிழக மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  கொரோனா பாதித்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. மருத்துவர்கள் செவிலியர்கள் நலன் காக்கவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் கொரோனா தாக்கம் அதிகரித்தும் வருகிறது. எனவே மீண்டும்  14 நாட்களுக்கு உத்தரவை  நீடிக்க வேண்டும் பரிந்துரை செய்துள்ளனர். இந்த ஒரு காலகட்டத்தில் மேலும் பல நபர்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக நோய் பரவுதலை தடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த ஒரு நிலையில், நாளை 11 ஆம் தேதி, பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து  இருந்தது. இந்த நிலையில் இன்று விடுக்கப்பட்ட பரிந்துரைப்படி நாளை தமிழகத்தின் சார்பாகவும் மத்திய  அரசிடம்  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க பரிந்துரை செய்யும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் படி நாளை   14  நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தான் ஊரடங்கு உத்தரவு என்ற மனநிலையில் இருந்தவர்களுக்கு இது ஒரு ஷாக்கிங் செய்தியாக இருந்தாலும், கொரோனா முன் நாம் வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாத சூழலில்  உள்ளோம் என்பதை புரிந்துக்கொண்டு அரசு எடுக்கும் முடிவு மக்கள் நலன் சார்ந்தது என்பதை உணர்தல் வேண்டும்.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்