
அத்திவரதர் விஷயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்த அறநிலையத்துறை..! பிரியோஜனப்படுமா..?
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிகப்பெரிய விசேஷமான அத்திவரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது அறநிலையத்துறை. இதற்கிடையில் நேற்று மட்டும் கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவு செய்த அற நிலைய துறை எக்ஸ்பிரஸ் சேவை திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியது.
அதன்படி மாலை 6 மணி முதல் 10 மணி வரை தரிசனம் செய்யலாம் என அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. இதன் மூலமாவது கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியுமா என இந்த சேவையை தொடங்கி உள்ளது அறநிலையத்துறை.
இருந்தாலும், இந்த திட்டம் மிக சிறந்த திட்டமா ..? என்பது கேள்வி குறியே. காரணம்.. முறையான ஏற்பாடுகள் எதுவும் பெரிய அளவில் இல்லை என்பதே.. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் விழா என்பதால் அரசு முன்கூட்டியே முறையான நடவடிக்கை எடுத்து திட்டம் வகுத்து இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.