ஆண்களுக்கு 3 நாள் அவதி..! பெண்களுக்கு நிம்மதியோ நிம்மதி ..! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

Published : Apr 15, 2019, 02:23 PM ISTUpdated : Apr 15, 2019, 02:30 PM IST
ஆண்களுக்கு 3 நாள் அவதி..! பெண்களுக்கு நிம்மதியோ நிம்மதி ..! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

வரும் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று தினங்களுக்கு மதுபான கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  

வரும் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று தினங்களுக்கு மதுபான கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 18 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதற்காக நாளை 16 ஆம் தேதி மற்றும் 17 ,18 ஆகிய 3 தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாக்கு எண்ணிக்கை தேதியான மே 23 ஆம் தேதியும் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது போன்றே,  நாளை மாலை 6 மணி முதல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம் ஊர்வலமும் நடத்தக்கூடாது என்றும், நாளை காலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக எந்த ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ள கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து நாளையுடன் மும்முரமாக இருந்த தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Diet Vegetables : காய்கறிகள் சத்தானதுதான் 'ஆனால்' குளிர்காலத்துல இந்த '5' காய்கறிகளை சாப்பிட்டால் ஆபத்து!!
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி