சுவையான முட்டை மஞ்சூரியன் இனி நீங்களும் வீட்ல செய்யலாம்.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Feb 20, 2024, 2:42 PM IST

சுவையான ருசியில் முட்டை மஞ்சூரியன் வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்..


இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் பிரைடு ரைஸ் நூடுல்ஸ் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் பல பெற்றோர்கள் இந்த உணவுகளை கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு. எனவே, அதை முடிந்த அளவிற்கு வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுப்பது நல்லது. அந்த வகையில் ஒன்றுதான் முட்டை மஞ்சூரியன். இதை நீங்கள் எளிமையாகவே உங்கள் வீட்டில் செய்யலாம்.

இதை நீங்கள் ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து விட்டீர்கள் என்றால் அடிக்கடி நீங்களே செய்வீர்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அற்புதமாக இருக்கும். உங்கள் குழந்தைகளும் இந்த முட்டை மஞ்சூரியனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் முட்டை மஞ்சூரியனை வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்:
முட்டை - 5
மிளகு தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
கடலை மாவு - 100 கிராம்
சோள மாவு - 100 கிராம்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
வெங்காயம் 2
குடை மிளகாய் - 2 
உப்பு - தேவையான அளவு
சோயாசாஸ் - தேவையான அளவு
சில்லி சாஸ் - தேவையான அளவு
டெமேட்டோ சாஸ் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: இறால் தொக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. இன்னும் வேணும்னு சொல்லுவாங்க!!

செய்முறை:
முட்டை மஞ்சூரியன் செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த முட்டையை உடைத்து அதில் ஊற்ற வேண்டும். அதனுடன் மிளகு தூள், மஞ்சள் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் கலக்கி வைத்த முட்டையை ஊற்றி இட்லி சட்டியில் வைத்து 15 வேக வைக்க வேண்டும். அதன் பிறகு அவித்து முட்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு பவுலில் சோளமாவு, கடலைமாவு, மிளகாய் தூள், மற்றும்  தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையில் வெட்டி வைத்த முட்டை துண்டுகளை முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது முட்டை மஞ்சுரியன் மசாலாவை தயார் செய்ய, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். பின் பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் நறுக்கி குடமிளகாயையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் தேவையான உப்பை சேர்த்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி விடும்.

இதையும் படிங்க:  ஞாபகசக்தி, மூட்டு தேய்மானமத்திற்கு பிரண்டை துவையல்.. சுவையாக செய்ய சூப்பர் டிப்ஸ்!!

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் மூன்றையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.  இப்போது ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் சோளமாவை சிறிதளவு தண்ணீர் கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து இந்த மசாலா கலவையில் சேர்த்து விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து பொரித்து வைத்துள்ள முட்டையை இந்த மசாலாவுடன் சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடம் அப்படியே மூடி வைக்க வேண்டும். முட்டை கலவையுடன் சேர்ந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். உங்களிடம் ஸ்ப்ரிங் ஆனியன் அல்லது மல்லி இலை இருந்தால் கடைசியாக மேலே தூவி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான முட்டை மஞ்சூரியன் ரெடி!! இதனை நீங்கள் சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட்டலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!