ஒரு நபர் முட்டையை அதிகம் விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 வரை எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை "கலக்கி" சாப்பிடும் நபரா நீங்கள்..! உஷார்....பெரும் ஆபத்து உங்களுக்கு தான்..!
அசைவ உணவை அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்களில்... குறிப்பாக முட்டை விரும்பிகள் அதிகமாக உள்ளனர் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிடுவதை விட உணவை உண்டு முடித்தவுடன் ஒரு ஆம்ப்லேட்டோ அல்லது கலக்கியோ சாப்பிடுவது வழக்கமாக வைத்துள்ளனர் பெரும்பாலானோர். ஆனால் இது உடலுக்கு எந்த அளவிற்கு நல்லது என்பது பற்றி சிறு சிந்தனையும் இல்லாமல் பெரும் ஆபத்தை நோக்கி செல்கின்றனர் என்றே கூறலாம்
undefined
ஒரு நபர் முட்டையை அதிகம் விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 வரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை நன்கு வேகவைத்து சாப்பிடுவதே நல்லது. அதற்கு பதிலாக கலக்கியாகவோ அல்லது ஆம்ப்லேட் ஆகவோ சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
முட்டையின் வெள்ளை கருவை பொருத்தவரையில் 3 கிராம் புரதமும் மஞ்சள் கருவில் 3 கிராம் புரதமும் இருப்பதாக தெரிவித்தாலும் மஞ்சள் கருவில் கூடுதலாக பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதனை பச்சையாக சாப்பிடும் போது செரிமான பிரச்சனையும் ஏற்படும். மேலும் பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியா உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக கொழுப்பு சத்து காரணமாக உடல் எடையை அதிகரிப்பதோடு உடல் முழுக்க கெட்ட கொழுப்பை அதிகரித்து. கல்லீரலில் தேங்கி இன்சுலின் சுரப்பை தடுக்கும். இவ்வாறு இன்சுலின் சுரப்பை தடுத்தால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை மனதில் வைத்துக்கொண்டு கலக்கி சாப்பிடலாமா ? இல்லையா என்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.