நாம் உணவு உட்கொள்ளும் முறைக்கும் இதய நோய்களுக்கும் தொடர்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள் ஆகியவை காரணமாக பல்வேறு உடல்நிலை கோளாறுகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் நாம் உணவு உட்கொள்ளும் முறைக்கும் இதய நோய்களுக்கும் தொடர்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உணவு உட்கொள்ளும் முறைகள் மற்றும் இருதய நோய்களுக்கு இடையிலான தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 103,389 பேர் பங்கேற்றனர். அவர்களில் 79 சதவீதம் பெண்கள், சராசரியாக 42 வயதுடையவர்கள்).
சமூகவியல் காரணிகள் (வயது, பாலினம், குடும்ப சூழ்நிலை போன்றவை), உணவு ஊட்டச்சத்து தரம், வாழ்க்கை முறை மற்றும் தூக்க சுழற்சி ஆகிய காரணிகளை ஆய்வு செய்தனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி காலை உணவை தவிர்க்கும் நபர்களுக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்பது கண்டறியப்பட்டது. "உதாரணமாக, காலை 8 மணிக்கு உண்பவரை விட, காலை 9 மணிக்கு முதல் முறையாக சாப்பிடும் ஒருவருக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 6 சதவீதம் அதிகம் குறிப்பாக பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.
அதே போல் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் நபர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. இரவு 8 மணிக்கு முன் உணவு சாப்பிடுபவர்களை விட, இரவு 9 மணிக்கு மேல் உணவு சாப்பிடும் நபர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 28 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஆராய்ச்சியாளர்கள் இரவு உணவுக்கும் அடுத்த நாளின் காலை உணவுக்கும் இடையிலான நேரம் - பக்கவாதம் போன்ற நோய் அபாயத்துடன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ளனர்.
குளிர்காலத்தில் குதிகால் வெடிப்புக்கு சிறந்த வீட்டு வைத்தியம் இதோ..!!
"பக்கவாதம், இதய நோய்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கத்திய சமூகங்களின் நவீன வாழ்க்கை முறை இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது அல்லது காலை உணவைத் தவிர்ப்பது போன்ற குறிப்பிட்ட உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுத்தது. இரவு உணவை சீக்கிரமாகவே உண்ணும் பழக்கம் இதய நோய் அபாயத்தைத் தடுக்க உதவும்" என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.