Weight Loss: டயட் இல்லாம உடல் எடையை குறைக்கணுமா?.... அப்ப இந்த 4 டிப்ஸ பாலோ பண்ணுங்க

By manimegalai aFirst Published Nov 22, 2021, 8:25 PM IST
Highlights

கடுமையான உணவுக் கட்டுப்பாடு (டயட்)  இல்லாமல் உடல் எடையை குறைக்க உதவும் சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உடல் பருமன் என்பது பெரும்பான்மையான மனிதர்களுக்கு மிகப் பெரும் பிரச்சனையாக உள்ளது. உணவுப் பழக்க முறை மாறி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தீவிர உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு (டயட்) மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. எனவே டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க உணவுப் பழக்க முறையை மாற்றுவதே முக்கிய தீர்வாகும். அந்த வகையில் டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க உதவும் சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1.காலை உணவு

இன்றைய சூழலில் பலரும் வேலை அவசரத்தில் தவிர்க்கும் ஒரு விஷயம் என்றால் அது காலை உணவு தான். இரவு முழுவதும் பட்டினியாக இருக்கும் வயிறு காலையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்காக ஏங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் பட்டினியாக இருப்பது உடலுக்குப் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலை உணவைத் தவிர்த்து மதிய உணவைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கக் கூடும்.
 
2.அதிக புரதம்

புரதச் சத்து என்பது வெறுமனே தசை வளர்ப்புக்கானது மட்டுமல்ல, அது உடல் எடை குறைப்பிலும் பெரும் பங்காற்றுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளில் அதிக புரதச் சத்து கொண்ட உணவுகளை பெரும்பாலும் உட்கொள்ளப் பழகுங்கள். 

3.பாக்கெட் உணவுகளை தவிர்த்தல்

பாக்கெட் உணவு மற்றும் உடனடியாக தயார் செய்யக்கூடிய வகையில் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் அதிகளவில் கொழுப்புச் சத்து இருக்கும். முடிந்தவரை பிரெஷ்சாக சமைத்து சாப்பிடுங்கள். அல்லது அதிக ஊட்டச்சத்துகள் கொண்ட பச்சையாக சாப்பிடும் உணவுகளை சாப்பிட பழக வேண்டும்.

4. தண்ணீர் அவசியம்

தண்ணீர் அதிகம் பருகுவது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது. அதுமட்டுமின்றி மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அது நன்மை பயக்கும். விஞ்ஞான ஆய்வுகளிலும் அதிக நீர் பருகுதல் உடல் எடை குறைப்புக்கு வித்திடுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. 

click me!