தோளில் தூக்கி காப்பாற்றி... தாயுமானவளான பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரின் மற்றொரு பக்கம்..!

Published : Nov 12, 2021, 01:02 PM IST
தோளில் தூக்கி காப்பாற்றி... தாயுமானவளான பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரின் மற்றொரு பக்கம்..!

சுருக்கம்

ஜெய் பீம் பாத்து போலீஸ்ன்னாலே பொய் கேஸ் போடுறவங்க கொலை பண்றவங்கன்னு பயந்து போய் இருந்தோம். ஆனா உயிர குடுத்து உயிர காப்பாத்தறவங்கன்னு தைரியம் குடுத்துட்டீங்க. 

ஜெய் பீம் பாத்து போலீஸ்ன்னாலே பொய் கேஸ் போடுறவங்க கொலை பண்றவங்கன்னு பயந்து போய் இருந்தோம். ஆனா உயிர குடுத்து உயிர காப்பாத்தறவங்கன்னு தைரியம் குடுத்துட்டீங்க. ராஜேஸ்வரியா இருந்து ராஜ ராஜேஸ்வரி ஆயிட்டீங்க’ என பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

சினிமாவில் பலர் ரீல் ஹீரோ! களத்தில் இவர் ரியல் ஹீரோ! இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அன்புமணி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து கெளரவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்தப்பாராட்டுக்கள் இப்போது கிடைத்து இருந்தாலும், ராஜேஸ்வரி பல ஆண்டுகளாக பலருக்கும் உதவி செய்து வந்துள்ளார்.  

கல்லறைத் தோட்டத்தில் மரம் விழுந்து இறந்ததாக கருதப்பட்ட ஒரு இளைஞரை தோளில் தூக்கி காப்பாற்றியதன் மூலம் அவர் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும் பிறருக்கு உதவுததில் எப்போதும் தாயுமானவளாகவே இருந்துள்ளார் என்பதற்கு சில சம்பவங்கள் இதோ...  

 2 ஏழைப் பெண்ணுக்கு தனது சொந்த செலவில் சீர்வரிசை கொடுத்து திருமணம் நடத்தி வைத்து நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். சென்னை அயனாவரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மாற்று திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநகரையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு அதில் தொடர்புடைய 12க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய, முக்கிய காரணமாக இருந்தார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற ஒரு கடைக்காரரிடம் ராஜேஸ்வரி சோதனை மேற்கொள்ள, அவர் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடையது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவற்றையெல்லாம் விட உச்சகட்டமாக, கடந்த 2019ஆம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. சென்னையில் நள்ளிரவில் இரண்டு மணிக்குப் பனிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை, தன்னுடைய காவல்துறை ரோந்து வாகனத்தில் ஏற்றிச்சென்ற ராஜேஸ்வரி, தாயையும் சேயையும் தக்க சமயத்தில் காப்பாற்றினார்.

இப்படி, கருணை மிகுந்த காரியங்களின் பட்டியலுக்கு உரியவரான ராஜேஸ்வரி தேனி மாவட்டம் பெரிய குளத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ வரலாறு படித்தபின், 1999ம் ஆண்டு நடந்த காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி எஸ்.ஐ.யாக பணிக்குச் சேர்ந்தார். தற்போது சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!