தோட்டாக்களை கீழே போட்டு.. மாத்திரை தயாரிப்பில் இறங்கிய "ராணுவத்தினர்"..! கொரோனாவால் வந்த சோதனை..!

By ezhil mozhiFirst Published Mar 30, 2020, 4:17 PM IST
Highlights

இன்றைய கால கட்டத்தில் கொரோனா என்ற ஒரு வைரஸால் உலக நாடுகளே என்ன செய்வது என்று  புரியாமல் தடுமாறுகிறது. 

 

உலக அளவில் பெரும் பீதியை கிளப்பி மனித இனத்திற்கு பெரும் அழிவை தருகின்ற கொரோனாவால் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இன்றைய கால கட்டத்தில் கொரோனா என்ற ஒரு வைரஸால் உலக நாடுகளே என்ன செய்வது என்று  புரியாமல் தடுமாறுகிறது. அதில் இந்தியாவும் ஒன்று...



தற்போதைய நிலையில் சீனா,இதனை அடுத்து அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்டநாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா. இந்த நிலையில் ஸ்பெயினில் நிலைமையை மிக மோசமாக உள்ளது

ஸ்பெயினில் தற்போதைய நிலை

கொரோனாவால் உயிரிழந்த சடலத்தை ஒன்றன் பின் ஒன்றாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். மேலும் ஐஸ் கட்டி மைதானத்தில் சடலத்தை பாதுகாப்பாக அடுக்கி வைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை   காப்பாற்றும் பணியில்,5000 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளதால்,அவர்களுடன் பணியாற்றும்  மற்றவர்களுக்கும் கொரோனா பயம் தொற்றி உள்ளது. இதன் காரணமாக பணி முடிந்து செல்பவர்கள்.. அவரவர் வீட்டில் தாமாகவே தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்  



தலைநகர் மெட்ரிட் பகுதிக்கு ரசாயன பொருட்கள் ஏந்திய கண்டெயினர் லாரிகள் செல்கின்றது. அங்கு கொரோனாவிற்கு தேவையான மருந்துகளை  தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளனர் ராணுவத்தினர். தோட்டாக்களை விட்டுவிட்டு இப்போது மருந்து தாயரிக்கும் நிலை உருவாகி உள்ளது . அதில் நாம் காய்ச்சலுக்கு சாதாரணமாகாக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மருந்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

click me!