நாளை "விளக்கு" ஏற்றும் போது உஷார்! மறந்தும் "சானிடைசர்" பயன்படுத்த வேண்டாம்..!

By ezhil mozhiFirst Published Apr 4, 2020, 6:41 PM IST
Highlights

நாளை மெழுகுவர்த்தி, அகல் விளக்கை ஏற்றும் முன் ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என முன்னேர்ச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

நாளை "விளக்கு" ஏற்றும் போது உஷார்!  மறந்தும் "சானிடைசர்" பயன்படுத்த வேண்டாம்..!

விளக்கு ஏற்றும் போது சானிடைசர் பயன்படுத்த வேண்டாம்!

பிரதமர் நரேந்திர மோடி, 5 ஆம் தேதியான நாளை இரவு 9 மணிக்கு, மின் விளக்குகளை அணைத்து விட்டு ஒளிவிட்டு எரியும் சுடராய் தீபம் அல்லது டார்ச், மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். சரியாக 9 நிமிடங்கள் தீபம் ஏற்றுங்கள் என தெரிவித்து இருந்தார். 

அதன் படி நாளை மெழுகுவர்த்தி, அகல் விளக்கை ஏற்றும் முன் ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என முன்னேர்ச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு விளக்கு ஏற்றும் போது கைகளை சோப்பு மட்டும் போட்டு கழுவிவிட்டு விளக்கேற்ற வேண்டும் என இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது. காரணம்.. சானிடைஸரில் உள்ள வேதிப்பொருள் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மற்ற சில முக்கிய  நிகழ்வுகளின் இருவரி செய்தி சுருக்கம் பார்க்கலாம்

  • சென்னையில் 20 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல்,ரூ.72.28க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 65.71க்கும் விற்பனையானது 
  • உலகளவில் கொரோனா உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியது
  • உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரித்து உள்ளது 
  • உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 ஆக அதிகரித்துள்ளது.
  • கர்நாடகாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்வு.
  • பாகல்கோட் பகுதியில் ஒருவர் உயிரிழந்ததால் கர்நாடகாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு 

  • திருவள்ளூரில் டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மதுபானங்கள் திருடிய சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் 
  •  நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்.அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது 
  • தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 58,440 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக  தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 8,945 வாகனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளது. ரூ.18.29 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது என காவல்துறை எச்சரித்து உள்ளது 
  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு கொரோனா இல்லாத ஆண் குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. தந்தை,தாய்க்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லாத குழந்தை பிறந்தது.

  • குடும்ப அட்டை இல்லாத 3ம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி  வழங்க  உள்ளதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதன் படி 4,022 பேருக்கு தலா 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார் 
click me!