ஆஹா..பணத்தை பெட்டியில் போட்டு "பிரட்" எடுத்துக்கலாம்! மக்களின் நேர்மை- கடை உரிமையாளரின் நம்பிக்கை!

By ezhil mozhiFirst Published Apr 4, 2020, 5:12 PM IST
Highlights

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆஹா..பணத்தை பெட்டியில் போட்டு "பிரட்" எடுத்துக்கலாம்! மக்களின் நேர்மை- கடை உரிமையாளரின் நம்பிக்கை!

ஊழியர் இல்லாத கடையில், மக்கள் தங்களுக்கு தேவையான பிரெட் எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை நேர்மையாக, அங்கு வைக்கப்பட்டு உள்ள பெட்டிக்குள் செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டைபெற்று வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவை பொதுமக்கள் பின்பற்றி, சமூகவிலகலை கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த தருணத்தில் மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது என்றே சொல்லலாம். மக்களின் சிந்திக்கும் திறனும், மனித நேயம், தன்னம்பிக்கை, நேர்மை உள்ளிட்ட பண்புகள் மக்களிடம் ஏற்கனவே இருந்தாலும் தற்போது அது கூடுதலாக வெளிப்பட்டு வருகிறது.

இதற்கு உதாரணமாக கோவை ரத்தினபுரியில் உள்ள மேம்பாலம் அருகே இருக்கும் இனிப்புக்கடையில் தான் இந்த பிரெட் விற்பனை நடைபெறுகிறது. பிரெட் விற்பனை செய்ய யாருமில்லாத காரணத்தினால், மூடப்பட்ட கடைக்கு வெளியில் ஒரு டேபிளில் ‘பிரட்’ வைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, "இங்கு வைக்கப்பட்டு உள்ள பிரெட் விலை ரூ.30, தேவையான அளவுக்கு எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டிக்குள் வைத்து விடுங்கள் என எழுதப்பட்ட பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

இதனை பார்க்கும் மக்கள், பசிக்கும் போதெல்லாம் வேறு எங்கும் கடைகள் இல்லை என்றால் பிரெட் சாப்பிடுகின்றனர். மேலும் நேர்மையாக அதற்கான பணத்தை பெட்டிக்குள் வைத்து விட்டு செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு தொடங்கிய நாள் முதல் இவ்வாறு தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்கிறார் கடை உரிமையாளர். இந்த விஷயம் அனைவராலும் பாராட்டப்ப்பட்டு வருகிறது.

click me!