கூகுளில் "இந்த வார்த்தையை" மட்டும் தேடாதீங்க ..! அடுத்த நிமிடமே பெரும் பிரச்சனை தான்...!

By ezhil mozhiFirst Published Sep 19, 2019, 7:02 PM IST
Highlights

கஸ்டமர் கேர் வங்கிக்கு போன் செய்வதாக இருந்தாலோ அல்லது நாம் பயன்படுத்தும் டெலிபோன் டிவி ஏசி உள்ளிட்டவை குறித்து கேட்டறிய வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுக தொலைபேசி எண்ணை கூகுளில் தேடுவோம். 

கூகுளில் "இந்த வார்த்தையை" மட்டும் தேடாதீங்க ..! அடுத்த நிமிடமே பெரும் பிரச்சனை தான்...! 

இணையதளம் பயன்படுத்தும்போது நாம் மிக முக்கியமாக ஒரு சில விஷயங்களை செய்யவே கூடாது என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப நாமும் மாறி வருகிறோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையை கண்முன்னே பார்க்கிறோம். நாம் பயன்படுத்தும் ஒரு மொபைல் போனிலேயே இந்த உலகம் அடங்கி விடுகிறது என்று சொல்லலாம்.

எதுவேண்டுமானாலும் கூகுள் சர்ச் என்று டைப் செய்தாலே போதும்.. அது குறித்த அனைத்து விவரமும் நம் கண் முன்னே அடுத்த நொடியே வந்து நிற்கும். இருந்தாலும் இதில் இருக்கக்கூடிய ஒரு சில ஆபத்துகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். முதலாவதாக நெட் பேங்கிங் பயன்படுத்துவோர்... தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் லாக் இன் செய்யும் போது உங்கள் வங்கியின் பெயர் மற்றும் முகவரியை நேரடியாக கூகுள் சர்ச்சில் டைப் செய்து பயன்படுத்துவது தவறான ஒன்று. அதற்கு பதிலாக நம்பிக்கையான ப்ளேஸ்டோர் பக்கம் சென்று நீங்கள் தேடும் அந்த ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.

கஸ்டமர் கேர் வங்கிக்கு போன் செய்வதாக இருந்தாலோ அல்லது நாம் பயன்படுத்தும் டெலிபோன் டிவி ஏசி உள்ளிட்டவை குறித்து கேட்டறிய வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுக தொலைபேசி எண்ணை கூகுளில் தேடுவோம். இதுபோன்ற சமயத்தில் போலியான தொலைபேசி எண்ணை பதிவிட்டு உண்மையான வாடிக்கையாளர் சேவை மையம் போன்றே விவரம் அளிக்கும் ஒரு கூட்டமும் இருக்கின்றது. அவர்கள் நம்மிடம் பெறும் விவரங்களை வைத்து தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். இதனால் பாதிப்புக்குள்ளாவது நாம் மட்டுமே.

இதேபோன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் நமக்கு தேவையான செயலியை பயன்படுத்த ப்ளே ஸ்டோர் சென்று சரியான செயலியை பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது இதற்கு பதிலாக நேரடியாக கூகுளில் சர்ச் செய்து பதிவிறக்கம் செய்வது தவறான ஒன்றாகும். மேலும் திடீரென உடல் நலம் பாதித்தால் இதுகுறித்து கூகுள் சர்ச் செய்து அதற்கு உண்டான மருந்துகளை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ளும் ஒரு சிலரை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது போன்று செய்யக்கூடாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இதன் மூலமாக பல்வேறு பக்கவிளைவுகள் மட்டுமின்றி சரியான சிகிச்சை முறையா என்பது கூட தெரியாமல் பேராபத்து நிகழ்ந்துவிடும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதற்குண்டான வெப்சைட் அட்ரஸை தாங்களாகவே டைப் செய்து அதன் உள் நுழைவது நல்லது. இல்லை எனில் வெறும் வார்த்தையை மட்டும் வைத்து கூகுள் சர்ச் செய்தால் உண்மையான வெப்சைட் போன்றே பல வெப்சைட்கள் காண்பிக்கும். அது தவறான ஒன்றை நீங்கள் தேர்வு செய்து விட்டால் அதில் நீங்கள் குறிப்பிடும் விவரங்களை வைத்து ஆன்லைன் மோசடி நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே மக்களே மேற்குறிப்பிட்ட இந்த ஐந்து விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தம்மை பாதுகாத்துக் கொள்வது சிறந்தது

click me!