பணம் தரலாம்... ஆனால் மாலை நேரத்தில் மட்டும் யாருக்கும் கொடுத்துடாதீங்க...!

By ezhil mozhiFirst Published Nov 2, 2019, 7:16 PM IST
Highlights

பொதுவாக இரவும் பகலும் இணையக்கூடிய காலத்தில் உடலியல் கூற்றுப்படி பிராண வாயுவை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும் என்பதால் மனம் நிலையாக இருக்காது. 

பணம் தரலாம்... ஆனால் மாலை நேரத்தில் மட்டும் யாருக்கும் கொடுத்துடாதீங்க...! 

அந்திவேளை சந்திவேளையில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர். இதில் அந்திவேளை என்பது உச்சி வெயில் காலம் என்பது பகலும் இரவும் சந்திக்கும். அதாவது மாலை அல்லது காலை நேரம் என்று கூறலாம்.

பொதுவாக இரவும் பகலும் இணையக்கூடிய காலத்தில் உடலியல் கூற்றுப்படி பிராண வாயுவை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும் என்பதால் மனம் நிலையாக இருக்காது. எனவே அந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு இழப்புகள் ஏற்படும் என்ற காரணத்தை மனதில் கொண்டே முன்னோர்கள் சில விதி முறைகளை வகுத்தனர்.

குறிப்பாக மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மக்களின் உதவியுடன் முன்னோர்கள் செயல்பட்டனர். எனவே இரவு நேரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதிலும் உறுதியற்ற நிலை எழுந்திருக்கும்.

தற்போது மின்சார வசதி உலகம் முழுவதும் இருந்தாலும் மாலை 5.45 முதல் 6.30 மணி வரையிலான கால கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பது பணம் கொடுப்பது வாங்குவது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்ல பலனளிக்கும். இங்கே பணம் கொடுப்பது என குறிப்பிட்டது ஐம்பது, நூறு ரூபாய் கடனாக வழங்குவது அல்ல. மாறாக பல ஆயிரங்களை முதலீடு செய்வதையும் கடனாக வழங்குவதையும், முன்பணமாக வழங்குவதையும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும் தவிர்க்க வேண்டும்.

ஒரு சிலர் அந்த குறிப்பிட்ட நேரத்தை தவற விட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் எனக் கூறலாம். அதுபோன்ற சமயத்தில் இனிப்பு அல்லது வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அல்லது கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளலாம்.இந்த அனைத்து விவரமும் நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்துவிட்டு சென்ற அற்புத டிப்ஸ் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  

 

tags
click me!