அதிர்ச்சி தகவல்..! தமிழகத்தில் சிறைகளும் - கைதிகளும்...!

Published : Nov 02, 2019, 06:57 PM ISTUpdated : Nov 02, 2019, 07:56 PM IST
அதிர்ச்சி தகவல்..! தமிழகத்தில் சிறைகளும் - கைதிகளும்...!

சுருக்கம்

தமிழகத்தில் மொத்தம் 138 சிறைகள் உள்ளன. அதில் மத்திய சிறைகள் 9 உள்ளது. நாட்டிலேயே அதிக சிறைகள் கொண்டது தமிழ்நாடு. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான கைதிகளை மட்டுமே கொண்டிருப்பதாகவும் தெரியவந்து உள்ளது. 

அதிரிச்சி தகவல்..! தமிகத்தில் சிறைகளும் - கைதிகளும்...! 

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி தமிழகத்தில் தான்  சிறை கைதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.மேலும் உத்திரபிரதேசத்தில் அதிக அளவிலான குற்றவாளிகள் சிறையில் இருப்பதாகவும் விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 138 சிறைகள் உள்ளன. அதில் மத்திய சிறைகள் 9 உள்ளது. நாட்டிலேயே அதிக சிறைகள் கொண்டது தமிழ்நாடு. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான கைதிகளை மட்டுமே கொண்டிருப்பதாகவும் தெரியவந்து உள்ளது. அதாவது  தமிழகத்தில் உள்ள மொத்த சிறைகளில் கொள்ளளவில் 61.3 சத்விகிதம் கைதிகள் மட்டுமே இருப்பதாகவும், ஆனால்  22 ஆயிரத்து 792 கைதிகளை அடைப்பதற்கான இட வசதி உள்ளதாம்.

ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை வெறும் 13 ஆயிரத்து 999 பேர்  மட்டுமே...அதில் 601 பெண் கைதிகள் மற்றும் 112 வெளிநாட்டு கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது இது தவிர்த்து, 6 பேர் தூக்கு தண்டனை கைதிகளும், 2 ஆயிரத்து 495 ஆயுள் தண்டனை கைதிகளும்  உள்ளனர். 

உத்திர பிரதேசத்தில் இயல்பை விட 65 சதவீதம் அதிக சிறை கைதிகள் உள்ளனர். அதாவது 165 சதவிகித கைதிகள் சிறைகளில் இருப்பதாகவும், சட்டீஸ்கர் மாநிலத்தில் 157.2 சதவிகிதம் கைதிகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதே போன்று சிறைகளில் இருந்து தப்பித்து செல்லும் கைதிகளின் எண்ணிக்கையில் தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேசமும் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது. அதே போன்று கைதிகள் தப்பித்து செல்வதில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்