இப்படி செய்தால் ... செல்வம் வீடு தேடி வருமாம்..! மறந்துடாதீங்க மக்களே...!

By ezhil mozhiFirst Published Dec 3, 2019, 7:09 PM IST
Highlights

வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் வைக்கக் கூடாது. இது இறைவனுடைய சக்தியை குறைக்க செய்யும். ஆன்மீக அதிர்வுகளும் குறையும்.
 

இப்படி செய்தால் ... செல்வம் வீடு தேடி வருமாம்..! மறந்துடாதீங்க மக்களே...! 

வீட்டில் செல்வம்  தங்க வேண்டும் என்றால் தினசரி காலை எழுந்தவுடன் கோவில் கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், தீபம், கண்ணாடி, சந்தனம் முதலியவற்றை ஏதாவது ஒன்றை பார்த்தால் நல்லது.

வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் வைக்கக் கூடாது. இது இறைவனுடைய சக்தியை குறைக்க செய்யும். ஆன்மீக அதிர்வுகளும் குறையும்.

செவ்வாய் வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். அமாவாசை பவுர்ணமி வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்வது மிகவும் சிறந்தது. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்ப்பது மிகவும் நல்லது. அமாவாசை பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடவே கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் வீட்டிற்கு ஆகவே ஆகாது. கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் கூடாது. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் என்றுமே வைக்கக்கூடாது.

 

வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது நாம் அணைக்கக் கூடாது. ஏற்கனவே ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும். சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும். இது போன்ற சில விஷயங்களை செய்து வந்தால் கண்டிப்பாக நம் வீட்டில் லட்சுமி கலாட்சம் தங்கும் என்பது ஐதீகம்.

இதனால் தான் நம் முன்னோர்கள் பல விஷயங்களை அன்று முதல் இன்று வரை நம் இளம் தலைமுறையினருக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் பின்பற்றுகிறோமா என்பது தான் கேள்வி

click me!