உங்கள் முடிக்கு டை அடிக்க போறீங்களா..? இது உங்களுக்கான செய்தி..!

By thenmozhi gFirst Published Dec 11, 2018, 5:24 PM IST
Highlights

டை செய்பவர்கள் தங்களுக்கு அந்த டை அலர்ஜியை ஏற்படுத்துமா..? இல்லையா..? என்பதை முதலில் பரிசோதனை செய்வது அவசியம்.

டை செய்பவர்கள் தங்களுக்கு அந்த டை அலர்ஜியை ஏற்படுத்துமா..? இல்லையா..? என்பதை முதலில்  பரிசோதனை  செய்வது அவசியம்.

டையின் அலர்ஜி தன்மை அறிய டாக்டர்களிடம் பரிசோதித்து, ஆலோசனை செய்து உபயோகப்படுத்தலாம். நீங்களாகவே, அலர்ஜி சோதனை நடத்தி விடலாம். அது எவ்வாறு செய்ய வேண்டும் என்பது கீழே
கொடுக்கப்பட்டு உள்ளது.

டையில் சில துளிகள் எடுத்து டெவலப்பருடன் சேர்த்து கலக்குங்கள். டை செய்ய நினைப்பவரின் காது  ஓரத்தில் எதாவது ஒரு சிறு பகுதி முடியை மட்டும் நன்றாக கழுவி காய விடுங்கள். பின்பு அந்த இடத்தில மட்டும் டை செய்து காய விடுங்கள். டை செய்த 48 மணி நேரம் கழித்து டை செய்த இடத்தை மட்டும்  சோப்பும் தண்ணீரும் கலந்து கழுவுங்கள். நீங்கள் பரிசோதித்த இடத்திலோ, அதன் சுற்றுப்புற பகுதியிலோ  சொறியோ, வீக்கமோ, எரிச்சலோ ஏற்படவில்லை என்றால் நீங்கள் தைரியமாக முழு அளவில் டை செய்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு அலர்ஜியே வராது. ஒவ்வொரு முறை டை செய்யும் போதும் இப்படி பரிசோதனை செய்வது  நல்லது. 

click me!