நகவெட்டிகளில் சிறிய துளை, 2 கத்திகள் ஏன் இருக்கு? பலருக்கு தெரியாத தகவல்!! 

Published : Mar 06, 2025, 03:59 PM IST
நகவெட்டிகளில் சிறிய துளை, 2 கத்திகள் ஏன் இருக்கு? பலருக்கு தெரியாத தகவல்!! 

சுருக்கம்

Hole In Nail Cutter : நகவெட்டிகளில் உள்ள சிறிய துளை, 2 கத்திகள் போன்ற பாகங்கள் என்னென்ன பயன்களுக்காக உள்ளன என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

நகவெட்டிகளில் நகங்களை மட்டும் தான் வெட்ட முடியும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மைதான். அவை நகங்களை பாதுகாப்பாக வெட்ட உதவுகின்றன. அதை எளிதில் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் நகவெட்டியில் நகம் வெட்டுவதை தவிர்த்து பல்வேறு விஷயங்களை செய்ய முடியும். உதாரணத்திற்கு அதில் உள்ள சிறிய துளை பல காரியங்களுக்கு உதவுகிறது. அதை இந்தப் பதிவில் காண்போம். 

நகவெட்டி 2 கத்திகள்: 
 
 ​நகவெட்டிகளில் இரண்டு கத்திகள், ஒரு நெம்புகோல் உள்ளன. இந்த நெம்புகோல் சோடா பாட்டில்களை திறக்க உதவும். வாள் போல தோற்றம் கொண்ட சிறு கத்திகள் பழங்களை வெட்ட, தோல் உரிக்க பயன்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பு: 

நகவெட்டிகள் ஆபத்துகாலத்தில் பெண்களுக்கு உதவும். இதில் உள்ள இரண்டு கூர்மையான கத்திகளை பெண்கள் தற்காப்புக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். பெண்களை தவறான நோக்கத்தில் அணுகும் ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நகவெட்டிகளில் உள்ள கத்திகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க:  Nail Cutting: இரவு நேரங்களில் ஏன் நகம் வெட்டக்கூடாது! ஏன் தெரியுமா?

 சிறிய துளை: 

நகவெட்டியின் அடிப்பகுதியில் உள்ள சிறிய துளை  வடிவமைப்பிற்காக உருவாக்கப்பட்டது என பலர் நினைக்கிறார்கள். அதனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அது தவறு. நகவெட்டியின் இந்த துளைக்கு பல பயன்பாடுகள் உள்ளன. நகம் வெட்ட ஒரு பிடிமானம் தேவைப்படும். நகவெட்டியில் உள்ள கத்திகள் ஒரு சிறிய துளையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நகவெட்டியை சுழற்றுவது, திறப்பது, மூடுவதை எளிதாக்கும்.இந்த துளையின் அடிப்படை பயனே நகவெட்டிக்கு நல்ல பிடியை வழங்குவதுதான். கால் விரல் நகங்களின் முனைகள் போன்ற கடினமான பகுதிகளை வெட்டும்போது இது உதவிகரமாக இருக்கும். 

இதையும் படிங்க:  நம் கை விரல் நகங்களில் வெள்ளை கோடு இருந்தால் அதிர்ஷ்டம் வரும்னு சொல்றது உண்மையா?

கீ செயின்:   

நகவெட்டியில் உள்ள துளையினை சாவிக் கொத்துடன் இணைத்து  கீ செயின் போல பயன்படுத்தலாம். இதனால் அலுவலகம் செல்லும்போது, ஏதேனும் பயணம் மேற்கொள்ளும்போது கூட நகவெட்டிதை கொண்டு செல்ல எளிதாக இருக்கும். சாவியுடன் கொண்டு செல்வதால் நகவெட்டியில் உள்ள கத்திகளை அவசரகாலங்களில் பயன்படுத்த முடியும்.  

கம்பிகளை வளைக்க! 

பொதுவாக அலுமினியம் அல்லது இரும்பு கம்பிகளை வளைக்க சிரமமாக இருக்கும். நகவெட்டியின் சிறிய துளை மூலம் அலுமினிய கம்பிகளை நுழைத்தால் அவற்றை எளிதில் வளைக்க முடியும். நகவெட்டியை கொசுவத்தி ஸ்டாண்ட் போல பயன்படுத்தலாம். கொசுவத்தி சுருளை நகவெட்டியின் கத்தியில் சொருகி வைக்கலாம்.  

மற்ற பயன்கள் 

நகங்களை வெட்டும்போது அதன் பக்கவாட்டில், கீழே படிந்துள்ள அழுக்குகளையும் நீக்க வேண்டும். இது தவிர நகவெட்டியின் கத்திகள் மூலம் நட்டுகள், போல்ட்கள் தளர்வாகும்போது இறுக்கமாக மாட்டிவிடலாம்.  நகவெட்டியில் உள்ள சிறிய துளை பிராண்டுக்கு ஏற்றபடி மாறும். இவை நகவெட்டியின் வடிவமைப்புக்கு மட்டுமின்றி அதற்கு ஒரு ஆதரவாகவும் செயல்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?
Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!