போதை தலைக்கேறிய இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? இப்படியும் ஒரு குடிகாரனானு சிரிக்காம இருக்க மாட்டீங்க...!!

Published : May 30, 2020, 10:58 AM IST
போதை தலைக்கேறிய இளைஞர்  என்ன செய்தார் தெரியுமா? இப்படியும் ஒரு குடிகாரனானு சிரிக்காம இருக்க மாட்டீங்க...!!

சுருக்கம்

நாகை மாவட்டம் அடுத்த நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி என்ற இளைஞர் தீவிர மதுப்பிரியர். ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த 2 நாட்களாக மதுகுடிக்காமல் இருந்திருக்கிறார்.அதன்பின்னர், கடந்த 26 ஆம் தேதி மதுக்கடைகள் திறந்தபோது அதிகளாவில் குடித்திருக்கிறார்..


கொரொனா தொற்றால் உலகம் முழுவதும் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற எந்த கடைகளும் திறக்க அனுமதியில்லை.இதேபோன்று பஸ் கார் ஆட்டோ லாரி மற்று விமானப்போக்கு வரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது.இந்த பட்டியலில் மதுப்பானக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் குடிமகன்களின் ஆட்டம் அடங்கி போயிருந்தது. இரண்டு மாதங்கள் கழித்து டாஸ்மாக் கடைகள் தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று திறந்ததும் குடிமகன்களின் சேட்டைகள் விதவிதமாக தமிழகத்தில் அரங்கேறியதை மக்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திக்கவில்லை.

 
இந்த பட்டியலில் ஒரு குடிமகன் செய்த சேட்டையைக்கேட்டால் விசித்திரமாகத் தான் இருக்கிறது. குடிபோதை தலைக்கு உச்சத்தில் ஏறிப்போய் குவாட்டர் பாட்டிலை வேட்டிக்குள் மறைத்து வைத்து கொண்டு போக போராடியவர் தனது ஆசன வாய்க்குள் சொறுகிய சம்பவம் ரெம்பபே விசித்திரம் தான்.

நாகை மாவட்டம் அடுத்த நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி என்ற இளைஞர் தீவிர மதுப்பிரியர். ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த 2 நாட்களாக மதுகுடிக்காமல் இருந்திருக்கிறார்.அதன்பின்னர், கடந்த 26 ஆம் தேதி மதுக்கடைகள் திறந்தபோது அதிகளாவில் குடித்திருக்கிறார்..இதனால் போதை தலைக்கு ஏறி மதுகுடித்த தனது குவாட்ட பாட்டிலை எடுத்து தனது ஆசன வாய்க்குள் சொறுகியுள்ளதாக தெரிகிறது.


 அந்த பாட்டில் முழுவதும் வயிற்றுக்குள் சென்றுவிட அவர் வலியால் துடித்துள்ளார். அவரை மீட்ட அருகில் உள்ளோர் அவரை நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்த மருத்துவர்கள்
மதுபாட்டில் உள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தனர்.பின்னர் பக்கிரிசாமிக்கு "இனிமா" கொடுத்து அவர் வயிற்றில் உள்ள பாட்டிலை வெளியே எடுத்து காப்பாற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள். நாகூர் பாண்டிச்சேரி எல்லையான காரைக்கால் எல்லையில் இருப்பது இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற வசதியாக அமைந்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Parenting Tips : பிறந்த குழந்தையை 'எத்தனை' நாள்கள் கழித்து தொட்டிலில் போடனும்? எந்த வயசுக்கு பின் போடக்கூடாது? முழுவிவரம்
Holding in Gas : வாயுவை அடக்கி வைக்கும் நபரா? அடிக்கடி அடக்கினால் 'உடம்புக்கு' என்னாகும் தெரியுமா?