உங்கள் வீட்டில் 10 வயது குறைவான பெண் குழந்தைகள் இருக்காங்களா? 'சுகன்யா சம்ரிதி யோஜனா' திட்டம் உங்களுக்கு தான்

By manimegalai aFirst Published Nov 28, 2021, 12:28 PM IST
Highlights

ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது மகள் பிறக்கும் போதே... அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க துவங்கி விடுகிறார்கள். அன்பும் அக்கறையும் காட்டி வளர்க்கும் உங்கள் மகளின் செழிப்பான வாழ்க்கைக்கு 'சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்' குறித்து தெரிந்து கொண்டு உங்கள் மகளின் வருங்காலத்தை வலிமையாக்குங்கள் பெற்றோர்களே...

ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது மகள் பிறக்கும் போதே... அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க துவங்கி விடுகிறார்கள். அன்பும் அக்கறையும் காட்டி வளர்க்கும் உங்கள் மகளின் செழிப்பான வாழ்க்கைக்கு 'சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்' குறித்து தெரிந்து கொண்டு உங்கள் மகளின் வருங்காலத்தை வலிமையாக்குங்கள் பெற்றோர்களே...

இந்த திட்டம், கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ’ பிரச்சாரத்தின் கீழ் தொடங்கினார். இது ஒவ்வொரு பெண்களின் கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்காலத்தை நினைவில் வைத்து துவங்கப்பட்ட ஒரு சிறுசேமிப்பு திட்டம். மாதம் மாதம் சிறிய அளவிலான பணத்தை உங்களின் மகளுக்காக சேமித்து, அவர்களுக்கு நீங்கள் அவர்களின் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் திட்டம்.

இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்...

'சுகன்யா சம்ரிதி யோஜனா' திட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் குழந்தை பிறந்த நாள் முதல் 10 வயதுக்குள் கணக்கு தொடங்கலாம்.  பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் கணக்கு திறக்கப்படும். இந்த திட்டம் திறக்கப்பட்டு 21 ஆண்டுகள் வரை இந்த கணக்கு நடைமுறையில் இருக்கும். உங்கள் மகளுக்காக நீங்கள் 21 ஆண்டுகள் வரை பணம் சேமிக்கலாம். ஒருவேளை நீங்கள் உங்களின் மகள் கல்வி செலவிற்காக இதில் இருந்து பணம் எடுக்க விரும்பினால்... பெண் குழந்தைக்கு 18 வயது நிரப்பிய பின்னர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்காக மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கு அல்ல.

நீங்கள் உங்களின் மகளுக்கு 'சுகன்யா சம்ரிதி யோஜனா' திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க வேண்டும் என்றால்,  கண்டிப்பாக 10 வயதுக்குள் இருக்க வேண்டும்.

'சுகன்யா சம்ரிதி யோஜனா' கணக்கைத் திறக்கும்போது, பெண் குழந்தையின் வயது ஆதாரம் (பிறப்பு சான்றிதழ்)  கட்டாயமாகும்.

ஒரு குடும்பத்தில் பெற்றோர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே 'சுகன்யா சம்ரிதி யோஜனா' திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியும். ஒருவேளை இரட்டை பெண் குழந்தைகள் பெற்றோருக்கு பிறக்கும் பட்சத்தில், மூன்றாவது குழந்தைக்கு இந்த திட்டத்தின் மூலம் கணக்கு துவங்க அனுமதிக்கப்படும்.


சுகன்யா சமிர்தி கணக்கு திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்:

*பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.

* பாஸ்போர்ட், பான் கார்டு, தேர்தல் ஐடி, மெட்ரிகுலேஷன் சான்றிதழ் போன்ற வைப்புத்தொகையாளரின் (பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்) அடையாள சான்று.

* மின்சாரம் பில் செலுத்தும் ஆவணம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், தேர்தல் அட்டை போன்ற வைப்புத்தொகையாளரின் (பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்) முகவரி ஆதாரம்.

இந்த விவரங்களோடு, உங்கள் பெண் குழந்தையின் பெயரில்... 1,000 ரூபாய் டெபாசிட் செய்ததோடு சமர்ப்பிப்பதன் மூலம் சுகன்யா சமிர்தி கணக்கை தபால் நிலையத்தில் அல்லது ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் திறக்க முடியும்.

click me!