Sabarimala: சகல ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம்படி பூஜை.. 2036 வரை முன்பதிவு..!

By vinoth kumarFirst Published Nov 25, 2021, 12:40 PM IST
Highlights

சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே ஸ்பெஷல் தான் என்பது அனைத்து மதத்தினருக்கும் தெரிந்த ஒன்று. அங்கு நடைபெறும், மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மாதாந்திர பூஜை மற்றும் படி பூஜை என்று சொல்லப்படும் 18 படிகளுக்கும் நடைபெறும் பூஜையும் சிறப்பு வாய்ந்தது. 

சபரிமலையில் ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணமுள்ள பதினெட்டாம் படி பூஜைக்கான முன்பதிவு வரும் 2036ம் ஆண்டுவரை முடிந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே ஸ்பெஷல் தான் என்பது அனைத்து மதத்தினருக்கும் தெரிந்த ஒன்று. அங்கு நடைபெறும், மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மாதாந்திர பூஜை மற்றும் படி பூஜை என்று சொல்லப்படும் 18 படிகளுக்கும் நடைபெறும் பூஜையும் சிறப்பு வாய்ந்தது. இதில், படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.75 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம், சகஸ்ரகலச பூஜைக்கு ரூ.40 ஆயிரம், லட்சார்ச்சனைக்கு ரூ.10 ஆயிரம், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரம், அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.5 ஆயிரம், திருவிழா நாட்களில் நடத்தப்படும் உத்தவ பலிக்கு ரூ.30 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

படி பூஜை என்பது 18 தேவதைகளையும் 18 படிகளில் ஆவாஹணம் செய்து அவர்களை பூஜிப்பதாகும். படி பூஜை நடைபெறும்போது, 18 படிகளையும் நன்கு சுத்தம் செய்து, பட்டு விரித்து, அலங்கரித்து பூ மற்றும் பழங்களை வைத்து வெகு விமர்சையாக பூஜை நடத்தப்படும். ஆனால், படி பூஜை நடைபெறும் சமயங்களில் பக்தர்கள் படியேறுவது தடைபடுகிறது என்ற காரணத்தினால், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் படி பூஜையானது கடந்த 18 ஆண்டுகளான நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை வழக்கமாக மாத பூஜை நாட்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. சமீப காலமாக மாத பூஜை நாட்களில் நடத்தப்பட வேண்டிய படி பூஜை பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விடுபட்ட முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்களுக்கான படி பூஜை தற்போது சீசனையொட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2036ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக உதயாஸ்தமன பூஜைக்கு 2026ஆம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 

click me!