நீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா ..? 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..?

By ezhil mozhiFirst Published Feb 27, 2020, 2:23 PM IST
Highlights

ஆரோக்கியமான உணவு, காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் 

நீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா ..? 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..? 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றால் என்ன என்பது குறித்து நம்மில் பலருக்கும் இன்றளவும் விடை தெரியாமல் இருப்பதை உணர முடியும். காரணம். என்னதான் புத்தகங்கள் படித்தாலும், என்னதான் கண் எதிரே இருக்கக்கூடிய கலப்பிட உணவு பற்றி நமக்கு தெரிந்தாலும் அதனை தான் நாம் மீண்டும் உண்கிறோம் 

சரி இதை எல்லாம் தவிர்க்க முடியவில்லை என்றாலும் சில விஷயத்தில் நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கத்தை நாம் கொண்டு வர முடியும். அந்த வகையில், 

1.ஆரோக்கியமான உணவு, காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் 

கண்டிப்பாக சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள், சர்க்கரை இனிப்பு பானங்கள் இவற்றை தவிர்பது நல்லது 

2. ஆரோக்கியமான உடல் செயல்பாடு நிலை, இது ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மனதை லேசாக வைத்துக்கொள்ளும்படி தியானம், யோகா அல்லது  உடற்பயிற்சி  போன்றவற்றை செய்தல் வேண்டும். 

3. ஆரோக்கியமான உடல் எடை, இது ஒரு சாதாரண உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) என வரையறுக்கப்படுகிறது, இது 18.5 முதல் 24.9 வரை இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும் 

4. புகைப்பிடுத்தல் கண்டிப்பாக இருக்கக்கூடாது. ஒரு சிலர் எப்போதாவது புகைபிடிப்போம் என்று மட்டும் தான் சொல்வார்கள். ஆனாலும் அதுவும் தவறு என்பதை புரிந்துக்கொள்ளுதல் வேண்டும். 

5. மிதமான ஆல்கஹால் உட்கொள்ளல், இது பெண்களுக்கு ஒரு நாளைக்கு 5 முதல் 15 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம்.மற்றும் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 5 முதல் 30 கிராம் வரை போதுமானது என சொல்லப்படுகிறது. 

அதாவது, நார்மலாக இருக்கும் பீரில் 12 அவுன்சஸ்  எடுத்துக்கொண்டால் 14 grams ஆல்கஹால் கிடைக்கும். அதே போன்று ஒயின் எடுத்துக்கொண்டால் 5 அவுன்சஸ் எடுத்துக்கொள்ளலாம் 

இதன் மூலம் ஆல்கஹாலை அளவோடு எடுத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு கேடு இல்லை என்பதும், அதே வேளையில் புகைபிடித்தல் மிகவும் மோசமான ஒன்று  என்பதையும் இது  உணர்த்துகிறது 

click me!