Betrayal from Family : இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருமே சில விஷயங்களை தங்களது வாழ்க்கையில் அனுபவித்தே தீர வேண்டும். அவற்றில் சில தான் வலி, பிரிவு மற்றும் துரோகம் உள்ளிட்டவைகளாகும். அதிலும் குறிப்பாக நம் சொந்தங்களே நமக்கு துரோகம் செய்யும் பொழுது அது மிகப்பெரிய வலியாக மாறுகிறது.
தங்களது வாழ்க்கையில் துரோகத்தை அனுபவிக்காத ஒரு மனிதன் இருக்கவே முடியாது என்றே கூறலாம், அந்த அளவிற்கு துரோகம் என்பது இந்த காலங்களில் மலிந்து விட்ட ஒன்றாக மாறிவிட்டது. நமக்கு, ஓரிரு வருடங்கள் பரிச்சயமான நபர்கள் நமக்கு துரோகம் செய்யும் பொழுது அவற்றை நம்மால் எளிதில் கடந்து வந்துவிட முடியும்.
ஆனால் அதுவே நம் நெருங்கிய சொந்தங்கள் நமக்கு துரோகம் செய்யும் பொழுது நம் மனது சுக்கு நூறாக உடைந்து போகிறது. ஆனால் அப்படிப்பட்ட நேரத்தில் அந்த துரோகத்தை எவ்வாறு தாங்குவது, அதற்கு நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
உடல் எடை டக்குனு குறைய காபியில் இந்த ஒரு பொருள் கலந்து குடியுங்க!
மன ரீதியாக மீண்டு வருதல்
துரோகம் என்பது முன்பு கூறியதைப் போல அனைத்து மனிதர்களும் ஏற்படும் ஒரு விஷயம்தான். அதிலும் குறிப்பாக நம்முடைய உற்ற சொந்தங்களே நமக்கு துரோகம் செய்யும் பொழுது முதலில் அதை நம்மை உணர்வு பூர்வமாக அதிக அளவில் பாதிக்கிறது. எனவே உணர்வு பூர்வமாக நம்மை நாம் தயார் படுத்தி கொள்ள வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, மன வலிமையும் உணர்வு பூர்வமான வலிமையையும் நாம் பெற வேண்டும்.
ஆதரவு தேடுதல்
இப்படி ஒரு இக்கட்டான சூழலில் நிச்சயம் நமக்கு பெரிய அளவிலான ஆதரவு தேவைப்படும். நான் தனியாக எதையும் சமாளித்துக் கொள்வேன் என்கின்ற மனப்பக்குவம் நம்மிடம் இருந்தாலும், அந்த மனப்பக்குவத்தை இன்னும் அதிகரிக்கவும் நமக்கு உணர்வு ரீதியாகவும் மனரீதியாகவும் பலத்தை அதிகரிக்கவும் நிச்சயம் நமக்கு ஒரு துணை தேவை. அந்த துணை நமக்கு உற்ற நண்பர்களாக இருக்கலாம், அல்லது கணவன் மனைவியாக இருக்கலாம், குழந்தைகளாக இருக்கலாம், ஆனால் உணர்வுபூர்வமாக நீங்கள் நிச்சயம் ஒரு ஆதரவை தேடிக் கொள்வது நல்லது.
மீண்டு செல்ல வழி
ஒரு துரோகம் என்பது உங்களை மனரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக இன்று இருவகையில் மட்டுமே பாதிக்க முடியும். உணர்ச்சி ரீதியாக பாதிக்கிறது என்றால் அதை நிச்சயம் உங்களால் எளிதில் கடந்து வந்துவிட முடியும். அதற்கு மேற்கூறிய இரு வழிகளை நீங்கள் கையாளலாம். ஆனால் அதுவே உங்கள் சொந்தங்கள் உங்களை பொருள் ரீதியாக ஏமாற்றிய, துரோகம் செய்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு வர உங்களுக்கு புது யுக்தி தேவை.
தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமா? அதன் ஜோதிட பலன்கள் பற்றி தெரியுமா?
பொருளாதார ரீதியாக நீங்கள் முன்னேற கடின உழைப்பு மீண்டு வர ஒரு வழியும் வேண்டும், ஆகவே அது கிடைக்கும் வரை மனம் தளராமல் நீங்கள் போராட வேண்டும். நல்ல வழிகாட்டுதலோடு வருகின்ற போராட்ட குணம் நல்ல முடிவுகளை தரும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D