குடும்ப மகிழ்ச்சியை சிதைக்கும் வீட்டில் வளர்க்கும் சில செடிகள்..!

By ezhil mozhiFirst Published Mar 25, 2019, 2:47 PM IST
Highlights

நம் வீட்டில் அழகுக்காக வளர்க்கக்கூடிய சில செடிகள் எதிர்மறை எண்ணங்களை கொடுக்கக்கூடியதாக கூட இருக்குமாம்.

நம் வீட்டில் அழகுக்காக வளர்க்கக்கூடிய சில செடிகள் எதிர்மறை எண்ணங்களை கொடுக்கக்கூடியதாக கூட இருக்குமாம். அதனால் தான் சில சமயத்தில், வீட்டில் குழப்பம், சண்டை, நிம்மதி  இல்லாமை என ஒரு பக்கம் இருக்கும். அதன்படி, பொதுவாக நம் வீட்டில் வளர்க்கக்கூடிய மணி பிளான்ட் எதிர்மறை ஆற்றலை தான் கொடுக்குமாம். 

அதேபோன்று முட்கள் உள்ள எந்த அழகிய தாவரமும் எதிர்மறை ஆற்றலை உண்டு படுத்தும் என கூறுகிறாரகள். அதே வேளையில் சோற்றுக்கற்றாழை மருத்துவ குணம் கொண்டதால், அவற்றை மட்டும் வீட்டில் வளர்க்கலாம் என்கிறார்கள். 

மேலும் ரோஜா செடியையும் வீட்டில் வளர்க்கலாம் என்கிறார்கள். ஆனால் வேறு எந்த முட்கள் கொண்ட செடியையும் வளர்க்க கூடாது என்கிறது சாஸ்திரம். அதே போன்று, சிவப்பு நிற மலர்களை கொடுக்கக்கூடிய போன்சாய் மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது என்கிறார்கள். ஆனால் தோட்டம் இருந்தால் தோட்டத்தில் வளர்க்கலாம். 

இதேபோன்று புளியமரம் வீட்டின் அருகில் இருக்கக் கூடாதாம்.  எனவே புளியமரம் இருக்கக்கூடிய இடங்களில் வீடு கட்டுவதை தவிர்ப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் மிக எளிதில் வாடக்கூடிய செடிகள் அதாவது பஞ்சு போன்ற செடிகள் தெரியாமல் கூட வீட்டில் வளர்க்கக்கூடாது. அது எவ்வாறு காய்ந்து விடுகிறதோ அதே போன்று நம் குடும்பமும் பொலிவிழந்து போகும் நிலை வரலாம் என்கிறது சாஸ்திரம்.

புளியமரத்தை போன்றே பனைமரமும் வீட்டின் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள கூடாது. வீட்டில் தொங்கியவாறு உள்ள பூச்செடிகள் மூலம் எதிர்மறை எதிர்மறை சக்திகள் அதிகரிக்குமாம். எனவே இது போன்ற நெகட்டிவ் ஆற்றலை கொண்ட எந்த செடியையும் வீட்டில்வளர்க்கக்கூடாதாம். 

click me!