வாங்க ... தாராளமாக "தளபதி அறிவாலயம் கட்டிடம்" பயன்படுத்திக்கோங்க..! ஓடோடி வந்து உதவும் திமுக இளைஞரணி !

By ezhil mozhiFirst Published Apr 2, 2020, 2:53 PM IST
Highlights

தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய இஸ்லாமியர்கள் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று உள்ளதை உறுதி செய்யப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். 

வாங்க.. தாராளமாக "தளபதி அறிவாலயம் கட்டிடம்" பயன்படுத்திக்கோங்க..! ஓடோடி வந்து உதவும் திமுக இளைஞரணி !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மதனாஞ்சேரி என்ற ஊராட்சியில் இயங்கிவரும் தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா பாதித்தவர்களுக்கு பயன்படுத்திக்கொள்ள திமுக இளைஞரணி அனுமதி கொடுத்து உள்ளது 

கொரோனா வேகமாக பரவும் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியம், கட்டுப்பாடு விதித்தும் வருகிறது அரசு. இந்த ஒரு நிலையில் மதனாஞ்சேரி ஊராட்சியில் இயங்கிவந்த "தளபதி அறிவாலயம்" கட்டிடத்தை கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது திருப்பத்தூர் திமுக. 

தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய இஸ்லாமியர்கள் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று உள்ளதை உறுதி செய்யப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அதில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நபர்களும் அடங்குவர். அதன் படி நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவுதலை தடுக்க அரசு மட்டுமின்றி, எதிர்க்கட்சியான திமுக மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக திமுக இளைஞரணியும் தீவிரமாக செயலாற்றி வருகிறது

"தளபதி அறிவாலயம்"

3000 சதுர அடி கொண்டது. இங்கு மொத்தம் 20 பேர் தனியாக ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்க முடியும். இதனை கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த பயன்படும் வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்ல.. இங்கு  தாங்கும் நபடர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகி வி.எஸ் ஞானவேலன் தெரிவித்து உள்ளார்.திமுக இளைஞரணியின் இந்த முடிவுக்கு அப்பகுதி  மக்கள்  பெரும் பாராட்டை தெரிவித்து உள்ளனர். 

click me!