தீபாவளியை முன்னிட்டு அந்தமானுக்குச் சுற்றுலா செல்ல குறைந்த கட்டணத்தில் சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஒன்றை இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது.
இந்திய ரயில்வேயில் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி (IRCTC) தீபாவளியை முன்னிட்டு புதிய சலுகைக் கட்டணப் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சுற்றுலா பயணத் திட்டத்துக்கு ஃபேமிலி அந்தமான் ஹாலிடேஸ் - கோல்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் & நிக்கோபர் தீவுகள் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களும் அந்தமானில் மிகவும் பிரசித்தமானவை. இதனால் இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் அந்தாமனுக்கு சுற்றுலா செல்வதை விரும்பிகிறார்கள்.
இந்நிலையில், ஐஆர்சிடி அந்தாமன் சுற்றுப்பயணத்துக்கான சலுகைக் கட்டணத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்தச் சுற்றுலாப் பயணத்தில் ஒரு நபருக்கு ரூ.52,750 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 6 நாள் பயணத்தில் 5 இரவுகள் அந்தமானில் தங்கி பல இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.
மூன்று பேர் கொண்ட குழுவாகச் சென்றால் ஒரு நபருக்கு ரூ.27,450 கட்டணம் செலுத்தினால் போதும். இதுவே இருவர் மட்டும் ஜோடியாகச் சென்றால் தலா ரூ.30,775 செலுத்த வேண்டும். குழந்தைகளையும் உடன் அழைத்து வருவதற்குத் தனி கட்டணம் வசூலிக்கப்படும். குழந்தைக்கு படுக்கை வசதி தேவை என்றால், ரூ.17,000 கட்டணமும், படுக்கை வசதி தேவை இல்லை என்றால் என்றால் ரூ.13,550 கட்டணமும் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
நவம்பர் 6ஆம் தேதியில் முதல் 24ஆம் தேதி வரை மட்டுமே இந்தச் சலுகைத் திட்டத்தில் சேர முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பயணிகளுடன் கிளம்பும் விமானம் முதலில் அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரை அடையும். முதல் நாளில், அங்கு உள்ள கார்பினின் மலைக்குகை, கடற்கரை மற்றும் சிறைச்சாலைக்குச் செல்லலாம்.
2வது நாளில் ரோஸ் தீவில் காலை உணவு சாப்பிடலாம். பின் வாட்டர் கேம்ஸுக்கு பேர் பெற்ற இடமான பே தீவுக்குக் கூட்டிச்செல்லப்படுவார்கள். அங்கு ஸ்கூபா டைவிங் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். மூன்றாவது நாள் தலைநகர் போர்ட் பிளேரிலிருந்து 54 கிமீ தூரத்தில் இருக்கும் ஹேவ்லாக் தீவுக்குச் போகலாம்.
4வது நாளில் நைல் தீவுக்குச் சென்று இயற்கைப் பாலம் மற்றும் லக்ஷ்மண்பூர் கடற்கரையைப் பார்க்கலாம். 5வது நாளில் பாரத்புர் கடற்கரைக்குச் சென்றபின், 6வது நாள் மீண்டும் போர்ட் பிளேருக்குத் திரும்பி அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பலாம்.