உங்கள் அக்கவுண்டில் தீபாவளிக்கு ரூ.2000 டெபாசிட்... பழைய பாக்கியை செட்டில்மெண்ட் செய்யும் எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 23, 2019, 3:27 PM IST
Highlights

தீபாவளிக்கோ அல்லது பொங்கல் பண்டிகைக்கோ எடப்பாடி பழனிசாமி அறிவித்த குடும்பத்திற்கு 2000 ரூபாயை  வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய அதிமுக ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  
 

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ‘’கஜா புயல் தாக்கத்தாலும், பருவமழை பொய்த்ததாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவவசாயிகள், நகர்ப்புற ஏழைகள்,  பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி, விசைத்தறி, கைத்தறி உப்பள தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை தொழிலாளர்கள் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ஆயிரம் நிதி வழங்கப்படும்.

கிராமப் பகுதிகளில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் நகர்புறங்களில் வாழும் 25 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் இதற்காக 1200 கோடி ரூபாய் 2018- 19 துணை மாணியக் கோரிக்கை நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது’’என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கி அசத்தினார் எடப்பாடி. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு 39 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததாலும் திமுக வழக்கு தொடுத்ததாலும் அந்தப்பணம் கொடுக்கப்பட்டது நிறுத்தப்பட்டது.

  

இருப்பினும் கடந்த சில மாதங்களாக பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை சேகரிக்கும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டிருந்தது. இதைக் கொண்டு, உரிய நேரத்தில் ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.2,000 என்ற வகையில் டெபாசிட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தப்பணம் வரும் தீபாவளிக்கு வழங்கப்படலாம் அல்லது பொங்கலுக்கு உறுதியாக கிடைக்கலாம் என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். 

ஆக மொத்தத்தில் சேகரிக்கப்பட்ட அந்த விவரங்களை வைத்து வங்கிக் கணக்குகளில் 2000 பணத்தை டெபாசிட் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!