இந்தியா: தற்போது... நாட்டையே அச்சுறுத்தும் டெங்கு கொசு..!

By ezhil mozhiFirst Published Oct 23, 2019, 1:41 PM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் 9300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக பெங்களூரில் மட்டும் 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா: தற்போது... நாட்டையே அச்சுறுத்தும் டெங்கு கொசு..!

டெங்கு வைரஸ் மற்றும் அதன் கேரியரான ஏடிஸ் ஈஜிப்டி கொசு பற்றி இந்திய மக்கள் சமீப காலத்தில் அதிகளவில் கேள்விப்பட்டிருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் 9300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக பெங்களூரில் மட்டும் 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது எங்கு அதிக டெங்கு கொசுக்கள் இருந்துள்ளது என்பது புலப்படும்.

மக்கள் அன்றாட பயன்பாட்டில் கிணறுகள்,குளங்கள் மற்றும் ஏரிகளை தண்ணீருக்காக நம்பியிருக்கிறார்கள்.செயற்கை அல்லது இயற்கை நீர் கொள்கலன்கள் (நீர் சேமிப்புக் கொள்கலன்கள், மலர் பானைகள், அப்புறப்படுத்தப்பட்ட டயர்கள், பானையின் கீழ் தட்டுகள், மட்பாண்டங்கள், மலர் பானைகள், வாளிகள், தகர கேன்கள்,மழைக்குழிகள், அலங்கார நீரூற்றுகள்,டிரம்ஸ், செல்லப்பிராணிகளுக்கான நீர் கிண்ணங்கள், பறவைக் குளியல் போன்றவை ) மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இருந்தால் அதிக டெங்கு பாதிப்பு ஏற்படும்

இது தவிர திறந்த அல்லது செப்டிக் டாங்குகள், வடிகால், கிணறுகள் மற்றும் நீர் மீட்டர் போன்ற நீரின் நிலத்தடி சேகரிப்பிலும் டெங்கு கொசுக்கள் குடிக்கொண்டிருக்கும். எனவே அடிப்படையில், ரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள் நம்மைச் சுற்றிலும் இனப்பெருக்கம் செய்யும். இதனால் மிக எளிதாக பாதிக்கக்கூடியவர்கள் நாம் தான்

இந்த கொசுக்கள் தன்னுடைய இனப்பெருக்கத்தை வேகப்படுத்தும். எனவே நமது சூழலையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும், தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது நல்லது. டெங்கு மற்றும் டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து இருக்க வேண்டும்  

ஒரு கொசு இருந்தாலும் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. சரியான நேரத்தில் கொசுக்கள் அழிக்காவிட்டால் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். அவை நம் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். டெங்குவால் பாதிக்கப்பட்டால் 15 முதல் 20 நாட்களுக்குள் குணமடைய முடியும் என்றாலும், இதிலிருந்து முழுமையாக மீள 3 மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொசுக்கள் நம்மை கொல்வதற்கு முன் நாம் அதனை ஒழிப்பதே நல்லது..!

click me!