மெட்ரோ ரயிலில் பயணிப்பவரா..? ரூ.20 கட்டணம் என்றாலும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தான்..!

By ezhil mozhi  |  First Published Dec 10, 2019, 7:06 PM IST

பலபேருக்கு வங்கி கணக்கு இருங்தாலும் முழுக்க முழுக்க ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டு உள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். 


மெட்ரோ ரயிலில் பயணிப்பவரா..? ரூ.20 கட்டணம் என்றாலும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தான்..! 

ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் முழுமையாக இதனை நடைமுறைப்படுத்த படவில்லை.

Tap to resize

Latest Videos

பலபேருக்கு வங்கி கணக்கு இருங்தாலும் முழுக்க முழுக்க ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டு உள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இந்த ஒரு நிலையில் பேருந்தில் பயணிக்கும் போதோ அல்லது ஒரு சில பொருட்களை வாங்க ரூபாய் நோட்டை பயன்படுத்துகிறோம். 

அதேவேளையில் கட்டணம் செலுத்துவதற்கு ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள். இந்த ஒரு தருணத்தில் சென்னை மெட்ரோ சேவை பயன்படுத்துபவர்கள் கூட அதற்குண்டான பாஸ் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மேலும் அவ்வப்போது மெட்ரோ சேவையை பயன்படுத்துபவர்கள் பணத்தைக் கொடுத்து டிக்கெட் பெற்று பயணம் செய்கின்றனர். 

ஆனால் தற்போது 20 ரூபாய் டிக்கெட் என்றாலும் கூட ஆன்லைன் பரிவர்த்தனை கட்டாயமாக்கப் பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாங்கள் வைத்துள்ள கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் மெட்ரோ சேவையை பயன்படுத்துபவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பாஸ் அல்லது பயணம் செய்பவர்கள் தங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மெட்ரோ சேவையை பயன்படுத்த உள்ளவர்கள் தங்களுடன் எப்போதும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை வைத்து இருப்பது நல்லது.

click me!