அதிர்ச்சியில்  பெற்றோர்கள்......!!! 10  மாத  குழந்தைக்கு  “ டே கேரில்” நடந்த  கொடூரம்.......!!!

 
Published : Nov 26, 2016, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
அதிர்ச்சியில்  பெற்றோர்கள்......!!! 10  மாத  குழந்தைக்கு  “ டே கேரில்” நடந்த  கொடூரம்.......!!!

சுருக்கம்

அதிர்ச்சியில்  பெற்றோர்கள்......!!! 10  மாத  குழந்தைக்கு  “ டே கேரில்” நடந்த  கொடூரம்.......!!!

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் , தங்கள்  குழந்தைகளை “ டே கேர் “ சென்டரில் விட்டுவிட்டு செல்வது  தற்போது  மிகவும் பிரபலம் .

ஆனால் அதில்  பல  சிக்கல்  உள்ளது  என்பதை  நம்மில்   எத்தனை  பேர் அறிவர். இவ்வாறு மும்பையில் ஒரு காப்பகத்தில் கொடுத்து சென்ற குழந்தையை அடித்து சித்தரவதை செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, நவி மும்பை, கார்கர் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 “ருசிதா சின்ஹா என்ற பெண் கடந்த திங்கட் கிழமையன்று தனது 10 மாத குழந்தையை பூர்வா டே கேட் காப்பகத்தில் கொடுத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலையை முடித்து விட்டு தனது குழந்தையை பெற்று கொள்ள வந்துள்ளார். அப்போது குழந்தையின் கண்ணை சுற்றி வீங்கி இருந்ததுள்ளது . குழந்தை தானாக விழுந்ததால் அடிபட்டது என சமாளித்ததாக  தெரிகிறது. ஆனால் ,குழந்தையின்  உடலில்  பல  இடங்களில்  காயம்  இருந்துள்ளது.

இதையடுத்து, குழந்தையை  மருத்துவமனைக்கு அழைத்து  சென்று, சிகிச்சைக்கு பின்னர், போஸிசில் புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது....

விசாரணையின்  முடிவில், காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 6 சிசிடிவி கேமரா வீடியோக்களை சோதனை செய்த போது, குழந்தையை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அப்சனா சாயிக் மற்றும் குழந்தை காப்பளர் மைய நிறுவனர் பிரியங்கா நிகம் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

வேலைக்கு செல்லும் கட்டாயத்தில்  உள்ள  பெண்கள் , இது போன்ற “ டே கேர் “ நம்பி  தான்  குழந்தையை  விட்டு  செல்கின்றனர். இங்கும் இது போன்று  நடைபெற்றால்  என்னதான்  சொல்வது......!!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!