
“பொடுகு” உங்கள் உயிரை வாங்குகிறதா? கண்ணு..! இத மட்டும் செய் போதும்...!
பொடுகு என்றாலே நம்மால் ஜீரணிக்க முடியாத ஒரு பிரச்னையாகி விட்டது.நாம் பயன்படுத்தும் சீப்பை மற்றவர்கள் எடுத்து விட்டாலே பயமா இருக்கும்.ஐயோ நம் தலையில் உள்ள பொடுகு அவர்களுக்கும்பரவிடுமோ...அல்லது அவர்களிடமிருந்து நமக்கு வந்து விடுமோ என்ற பயம் கண்டிப்பாக அனைவருக்குமே இருக்கும்.
பொதுவாகவே பொடுகு வறண்டு இருக்கும் தலையில் எளிதில்வரும்.அதுவும் சூடு உடம்வு என்பார்கள் அல்லவாஉஷ்ணம் அதிகமாக இருந்தாலோ அல்லது சரிவர பராமரிக்காமல் இருந்தாலோ எளிதில் பொடுகுவரும்
மேலும் ஒருமுறை பொடுகு வந்துவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்றுதான்
பொடுகால் சரும கோளாறு அதிகமாகும், தலையில் அதிக நமிச்சல் இருக்கும் அல்லது நமிச்சலே இல்லாமல் அதிகமாக வெள்ளை நிறத்தில் தூசி போல்பறக்கும்,நாம் அணிந்திருக்கும் ஆடையிலே அதனை பார்க்க முடியும்.
அவ்வளவு ஏன் உங்கள் விரலை கொண்டு, தலையில் சொரிந்தால், அதிகமான பொடுகு உள்ளதை நாமே புரிந்துக் கொள்ளலாம்.சரி இந்த பொடுகில் இருந்து தப்பிக்க சில ஐடியா பார்க்கலாமா
1.ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை எடுத்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதை தலையில் ஊறவைத்து 10 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும். பொடுகு உட்பட தலையில் உள்ள பெரும்பாலான சரியாக இது ஒரு அருமையான வழி.
2.இலுப்பை புண்ணாக்கை இடித்து நன்கு பொடியாக்கி நீரில் கலக்க வேண்டும். இந்த பசையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும். இலுப்பை புண்ணாக்கை நாட்டு மருந்துகளில் எளிதாக கிடைக்கும்.
3.சின்ன வெங்காயத்தை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர பொடுகு தொல்லை மறையும்.
மேற்குறிப்பிட்ட இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க....வித்தியாசத்தை உணருங்கள்....
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.