சரசரவென உயர்ந்த சிலிண்டர் விலை..! அதிருப்தியில் மக்கள்..!

By ezhil mozhiFirst Published Mar 1, 2019, 8:18 PM IST
Highlights

மானியம் மற்றும் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு கண்டுள்ளது. 
 

சரசரவென உயர்ந்த சிலிண்டர் விலை..! மக்கள் அதிருப்தி..! 

மானியம் மற்றும் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு கண்டுள்ளது. அதன் படி, மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 42 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.2.08 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 3 மாதங்களாக, தொடர்ந்து, சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சிலிண்டரின் விலை உயர்வு கண்டுள்ளது. விலை உயர்வு படி,14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலையில் ரூ.2.08 பைசா உயர்ந்து, ரூ.493.53 பைசா ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.495.61 க்கு விற்கப்படுகிறது. 

அதே வேளையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.13.39 பைசா குறைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.42.50 பைசா உயர்ந்து ரூ.701.50 - கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மானியமில்லாத சிலிண்டர் விலையை பொறுத்தவரை, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.133 உம், ஜனவரி 1ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.120.50 உம் குறைக்கப்பட்டது. கடந்த மாதம் மட்டும் ரூ.30 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, மானிய தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதிலும், சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதையடுத்து வங்கிக்கணக்கில் செலுத்தும் மானிய தொகையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, பிப்ரவரி மாதம் ரூ.165.47 வழங்கி இருந்ததில் இருந்து இனி ரூ.205.89 வாங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!