ஒன்றரை வருடத்தில் 128 குழந்தை திருமணங்கள்..! திருப்பூர் முதல் தூத்துக்குடி வரை... வெளிவந்த பல வில்லங்க சமாச்சாரம்..!

By ezhil mozhiFirst Published Mar 1, 2019, 4:28 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் குழந்தை திருமணங்கள் அதிரடியாக நிறுத்தப்பட்டு அது குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

ஒன்றரை வருடத்தில் 128 குழந்தை திருமணங்கள்..!  திருப்பூர் முதல்  தூத்துக்குடி வரை... வெளிவந்த பல வில்லங்க சமாச்சாரம்..! 

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் குழந்தை திருமணங்கள் அதிரடியாக நிறுத்தப்பட்டு அது குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகி உள்ளது.கடந்த 2 வருடத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில், ஒன்றரை வருடத்தில் மட்டும் 128 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு சிறார் காவல் துறை, சைல்ட் லைன், மாவட்ட குழந்தைககள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துகிறது. இருந்தாலும் இத்தனையும் மீறி குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஈரோட்டில் இருந்து வந்து தூத்துக்குடி பெண்ணை குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறுமியை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக,தாளமுத்து நகர், சத்யா நகர், எம்ஜிஆர் நகர், ராஜபாண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக குழந்தை திருமணங்கள் நடைபெற்று வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏன் அந்த குறிப்பிட்ட பகுதியிலும் மட்டும் இப்படி நடிக்கிறது என ஆய்வில் இறங்கிய ஒத்து தான் பல திடுக்கிடும் விஷயங்கள் தெரியவந்துள்ளது. கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ள தனியாக இடைத்தரகர்கள் வைத்துள்ளனர்.

அதிலும் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள், படிப்பறிவில்லாத குழந்தைகள், வறுமையிலும் வாடும் பெண்கள் இவர்கள் மீது குறி வைத்து தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல், இவ்வாறு குழந்தை திருமணம் செய்துக்கொள்ளும் போது, ஒரே நாளில் இடை தரகர்களிடம் பேசி வைத்து விட்டு, தேவையான பணத்தை செட்டில் செய்து, பெண்ணிற்கு ஒரு பவுன் நகை அல்லது 3 பவுன் நகை போட்டு, அவர்களிடையே காப்பாளர்கள் அல்லது அதிக பணம் கொடுத்துவிட்டு அன்றே இவைகள் பகுதிக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால், சிறுமியை விட 25 வயது பெரியவர்கள் 30 வயது அதிகம் உடையவர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதையும்  மீறி திருமணம் நடைபெற்று அவர்களுடன் செல்லும் சிறுமிகள், ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்து வேறு இடங்களுக்கு சென்று விடுவதும் உண்டு என்கிறது தகவல். குழநதைகள் நல வாரியம் இது போன்ற விஷயங்களில் மேலும் கவனம் செலுத்தி குழந்தை திருமணம் முதல் இது போன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

click me!