தலையில் வழுக்கை விழுவதை தடுக்கும் தயிர்! ஆண்களே ஒரு நிமிசம் இதை படிங்க!

By vinoth kumarFirst Published Oct 31, 2018, 1:00 PM IST
Highlights

ஆண்களின் தலைபோகும் பிரச்சினை வழுக்கை. பல்வேறு காரணங்களால் முடி ஆரோக்கியம் குறைந்து கொட்டத் தொடங்கி வழுக்கைக்கு வழிவகுக்கிறது. பரம்பரை, சீரற்ற உணவு முறை, வேதி பொருட்களை பயன்படுத்துதல், வலிமையற்ற முடி, அசுத்தமான சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஆண்களின் தலைபோகும் பிரச்சினை வழுக்கை. பல்வேறு காரணங்களால் முடி ஆரோக்கியம் குறைந்து கொட்டத் தொடங்கி வழுக்கைக்கு வழிவகுக்கிறது. பரம்பரை, சீரற்ற உணவு முறை, வேதி பொருட்களை பயன்படுத்துதல், வலிமையற்ற முடி, அசுத்தமான சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

 

முடிப் பிரச்சினைகளுக்கு தயிர் முற்றுப்புள்ளி வைக்கிறது. தயிரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், தாதுப் பொருட்களும் உள்ளன. வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், சோடியம் போன்றவையும் உள்ளன.

பொடுகு

முடி உதிர பொடுகும் ஒரு காரணம். பொடுகை ஒழிக்கத் தேவையானவை - வெந்தய பொடி 5 ஸ்பூன், தயிர் 3 ஸ்பூன், வெங்காய சாறு 2 ஸ்பூன்

வெந்தயத்தை பொடி செய்ய வேண்டும். வெங்காயத்தை அரைத்து சாற்றை எடுத்து கொள்ளவும். தயிருடன் வெங்காய சாறு, வெந்தய பொடியக் கலந்து தலைக்கு தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும்.வாரத்திற்கு 2 முறை செய்தாலே பொடுகு தொல்லை ஒழிந்து, முடி உதிராது


முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா? தேவையானவை - ஒரு கை கறிவேப்பில்லை, ஒரு கை மருதாணி, 3 ஸ்பூன் தயிர்

கருவேப்பில்லை, மருதாணியை சேர்த்து அறைத்த பேஸ்ட் 3 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை தயிருடன் கலந்து தலைக்கு தேய்த்து 45 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தலைக்கு குளிக்கவும். இது முடி கொட்டும் பிரச்சினைக்கு விரைவான தீர்வு.

அடர்த்தியான முடியை பெற... 

அடர்த்தியான முடியைப் பெற உதவும் தயிர் வைத்தியத்துக்கு தேவையாவை - ஒரு செம்பருத்தி இலைகள், தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன், தயிர் 3 ஸ்பூன்

செம்பருத்தி இலையை தயிருடன் சேர்த்து அரைத்த பேஸ்டை  தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 5 முதல் 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவேண்டும். சிறிது நேரம் ஆற விட்டு பின்ன தலைக்கு தேய்த்து ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளிக்கவேண்டும். இந்த வைத்தியம் முடியை அடர்த்தியாக வளர செய்யும்.

மென்மையான முடிக்கு...

முடி வறட்சியாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால் அதற்கும்  வைத்தியம் உள்ளது. தேவையானவை - எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், தயிர் 2 ஸ்பூன்கள், தேன் சில துளிகள்

தயிருடன் எலுமிச்சை சாற்றையும், தேனையும் கலந்து தலையில் தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்தால் முடி மென்மையாகவும், உறுதியாகவும் இருக்கும்.

click me!