மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசய பழம்!

By vinoth kumarFirst Published Oct 31, 2018, 11:54 AM IST
Highlights

ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனித்துவமும், சிறப்பும் உண்டு அந்த வகையில் எண்ணற்ற நன்மைகளை வழங்கும் ஒரு பழம்தான் மங்குஸ்தான் பழம்.

ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனித்துவமும், சிறப்பும் உண்டு அந்த வகையில் எண்ணற்ற நன்மைகளை வழங்கும் ஒரு பழம்தான் மங்குஸ்தான் பழம்.

ஆன்டிஆக்சிடண்ட்கள்

மங்குஸ்தான் பழத்தில் உள்ள எக்ஸோந்தன் என்னும் பொருள் இதய கோளாறுகளை தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சிதைந்த திசுக்களை குணப்படுத்துவதோடு, வயதாவது, உடலியல் மற்றும் மனக்கோளாறுகளையும் தடுக்கிறது. 

குறைந்த கலோரிகள் 

100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் 63 கலோரிகளே உள்ளது குறைந்த கொழுப்புகளும், அதிகளவு நார்ச்சத்துக்களும் உள்ளன. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

வைட்டமின் சி 

மங்குஸ்தானில் உள்ள வைட்டமின் சி காய்ச்சலுக்கு எதிராக செயல்படுவதுடன் தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.  கர்ப்ப காலத்தில் இந்த பழத்தைச் சாப்பிடுவது கருப்பையை வலுப்படுத்தும். 

இரத்த ஓட்டம் 

மங்குஸ்தான் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு அனிமியா ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. இரத்த ஓட்டத்தையும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது, இதனால் ஆர்த்ரோகிளோரோசிஸ், உயர் கொழுப்பு, இதய நெரிசல், மார்பு வலி போன்றவற்றை தடுக்கிறது. கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. கொழுப்பின் அளவை குறைக்க பயன்படுகிறது. இதயத்தின் சீரான இயக்கத்திற்கும் உதவுகிறது.

காசநோய் 

மங்குஸ்தானில் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய பண்புகள் உள்ளன. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. 

புற்றுநோய் 

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது செல்லுலர் ரெஸ்ட் எனப்படும் இதய அழுத்தத்தை சரிசெய்ய உதவுகிறது. 

இரத்த அழுத்தம் 

மங்குஸ்தானில் உள்ள உள்ள பொட்டாசியம் மாரடைப்பு மற்றும் கரோனரி இதய நோய்கள் போன்றவற்றிக்கு எதிராக செய்லபட உதவுகிறது, இது செல் மற்றும் உடலுக்கு முக்கியமான திரவங்களை சமநிலைப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 

முகப்பருக்கள் 

இதில் உள்ள இயற்கையான ஆன்டி பாக்டீரியல் மற்றும் நுண்ணுயிர் பொருட்கள் பலவித சரும பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது. முகப்பருக்கள், தோல் கறைகள், எண்ணெய் சருமம் மற்றும் உலர் சருமம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

click me!