செக்சுக்கு பிறகு ஆண் – பெண் இருவருமே குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

By thenmozhi gFirst Published Oct 5, 2018, 2:50 PM IST
Highlights

முதலிரவு முடிந்து, தம்பதியர் தங்கள் முதன் முறையான புணர்தலை முடித்த பின், பெண்ணை தலைக்கு குளிக்க சொல்வது வழக்கம். 

முதலிரவு முடிந்து, தம்பதியர் தங்கள் முதன் முறையான புணர்தலை முடித்த பின், பெண்ணை தலைக்கு குளிக்க சொல்வது வழக்கம். 

பல இடங்களில் ஆண்களும் தலைக்கு குளிப்பார்கள்

தலைக்கு குளிக்க காரணம் கேட்டால் சாஸ்திரம், சம்பிரதாயம் என்று சப்பைக் கட்டு பதில்கள் தான் கிடைக்கும். ஆணும் பெண்ணும் கன்னித்தன்மையை இழந்ததற்கான அடையாளம், அதற்கான தலை முழுகல் என்று கூறப்படுவதுண்டு. 

முதலிரவு முடிந்த பின் தம்பதியர் பல சடங்குகளை செய்ய வேண்டி இருக்கும்; குல தெய்வ வழிபாடு என கோவில்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். உடலால் உறவு கொண்டால், குளித்து விட்டு தான் பூஜைகளை செய்ய வேண்டும் என்பது இந்து சமயத்தின் முக்கிய கொள்கை.

முதலிரவு மட்டும் அல்ல, எப்பொழுது புணர்தலில் ஈடுபட்டாலும் தலைக்கு குளிக்க வேண்டும். சாஸ்திரப்படி மட்டும் இன்றி, அறிவியல் ரீதியாகவும் கலவிக்கு பின் குளிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை.

பகலில் கலவி கொள்தல் தவறு என்று கூறப்படுகிறது. கோவில்களுக்கு செல்வது, பூஜையறையை புழங்குவது மற்றும் விருந்தாளிகள் வரும் நேரமான காலை அல்லது பகல் பொழுதில் புணர்தல் கூடாது என்பதாலேயே இரவில் உறவு கொள்ளும் வழக்கம் பின்பற்றப்பட்டு வரப்படுகிறது.

மனைவியர் கலவிக்கு பின் தலைக்கு குளிக்க வேண்டி இருப்பதால், கலவியை தவிர்ப்பதாகவும், கலவிக்குப் பின் வெளியே செல்ல வேண்டும் என்றால், கூந்தல் ஈரம் காய்ந்து கிளம்ப நேரம் ஆகிறது என்றும் கணவன்மார்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

ஒருமுறை புணர்தலுக்குப் பின் மறுமுறை அழைத்தால் பெண்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அதற்கு காரணம் குளியல் முறைதான் என்றும் கணவன்மார்கள் கூறுகின்றனர்.

என்ன செய்வது? சாஸ்திரமும் அறிவியலும் ஒரு விஷயத்தை உறுதி பட பல காலமாக கூறி வருகிறது என்றால், அதில் உண்மைகள் இருக்கத்தானே செய்யும்.

click me!