2 பேருந்து இடையில் சிக்கி கைக்குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி.. ஈரக்குலையை நடுங்க வைக்கும் காட்சிகள்.!

Published : Oct 25, 2021, 06:25 PM IST
2 பேருந்து இடையில் சிக்கி கைக்குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி.. ஈரக்குலையை நடுங்க வைக்கும் காட்சிகள்.!

சுருக்கம்

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு அரசு பேருந்தும் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக 2 பேருந்துகளுக்கு இடையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி சிக்கிக் கொண்டனர். இந்த இரண்டு ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதுச்சேரி அருகே இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கைக்குழந்தையுடன் தம்பதி அதிஷ்டவசமாக  உயிர் தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு அரசு பேருந்தும் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக 2 பேருந்துகளுக்கு இடையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி சிக்கிக் கொண்டனர். இந்த இரண்டு ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதனை இரு பேருந்துகளில் இருந்து பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பேருந்துகளில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!