தாம்பத்ய வாழ்க்கையில் இப்படி ஒரு தவறை செய்யலாமா..? அதுவும் ஆண்கள்..!

By ezhil mozhiFirst Published Feb 18, 2019, 2:16 PM IST
Highlights

திருமணமான தம்பதிகளிடையே தாம்பத்ய உறவு எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தம் தான்.

தாம்பத்ய வாழ்க்கையில் இப்படி ஒரு தவறை செய்யலாமா..? 

திருமணமான தம்பதிகளிடையே தாம்பத்ய உறவு எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தம் தான்   

தாம்பத்ய வாழ்க்கையில் சற்று பின்னடைவு இருந்தாலே போதும்....இதனாலேயே இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விடும் நிலைக்கு செல்கிறார்கள். தாம்பத்தியம் என்பது உடல் ரீதியாக சார்ந்தது மட்டும் அல்ல, இரு மனங்கள் சார்ந்தது. ஒரு சிலர் உடல் ரீதியாக உறவு கொள்வது மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மன ரீதியாக எந்த உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது மிகவும் தவறான ஒன்று. இது தன் துணைக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தும். 

முன்பெல்லாம் தாம்பத்யம் பற்றி வீட்டு பெரியவர்கள் சொல்லி முதலிரவுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இன்று அப்படியா ? பள்ளி படிக்கும் போதே இது குறித்த புரிதல் வந்துவிடுகிறது. அப்படி இருக்கும் போது திருமண வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்? காதல் என்பது என்ன ? காமம் என்பது என்ன தெரியாதா..?

அதிலும் குறிப்பாக, திருமணம் முடிந்த தம்பதிகள் தன் மனைவியிடம் காமத்தை மட்டும் எதிர்பார்ப்பது மிகவும் தவறு. அதிலும் காதல் தான் மிக முக்கியமாக இருக்கும். 

தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடும் போது இருவரும், அதில் ஆர்வம் இருப்பதை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும். தாம்பத்திய உறவு முடித்தவுடன், இருவரில் ஒருவர் உடனடியாக விலகி செல்வது தவறு. அதற்கு பதில் இருவரும் சில நிமிடம் பேசி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். 

தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது கணவன் தன் துணையிடம், அசிங்கமாக பேசுவது இருக்கக்கூடாது. அழகிய விமர்சனம் செய்வதாக கருதி, தன் துணையிடம் தவறான எண்ணங்கள் அண்ட விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.தாம்பத்திய உறவில் ஈடுபடும் இருவருமே சம அளவில் தங்களுடைய பங்களிப்பை தரவேண்டும்.

தனக்கு விருப்பம் இல்லாமல், ஏதோ தன்னுடைய துணைக்கு வேண்டும் என்பதற்காக உறவில் ஈடுபடுபடுவதாக வெளிப்படுத்திக்கொள்ள கூடாது. இதனால் அடுத்த முறை, நீங்கள் உறவில் ஈடுபட ஆர்வமாக இருந்தாலும், உங்கள் துணைக்கு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு உண்மையில் உறவில் நாட்டம் இல்லாத சூழ்நிலையில் அதனை வெளிப்படுத்தலாம். ஆனால் இதையே ஒவ்வொரு முறையும் செய்ய கூடாது இது தவறில் முடியும்.

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, உங்களுக்கு ஒரு விருப்பம் இருக்கும், உங்களுடைய துணைக்கு ஒரு விருப்பம் இருக்கும். முடிந்தவரை அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அதே போல உங்கள் விருப்பத்தையும் நிறைவேற்ற உங்கள் துணை தயக்கம் காண்பித்தால் கட்டாய படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்களிடம் காதல், அன்பு ஆகிய உணர்வுகள் இல்லை என்பதை அது வெளிப்படுத்தும். மேற்குறிப்பிட்ட அனைத்தையும் எப்போதும் மனதில் வைத்துக்கொண்டு வாழ்க்கையை திறம்பட நடத்துவது நல்லது. 

click me!