கோரோஜன மாத்திரை, கொரோனாவுக்கான மாத்திரையா.! பூரம் மருந்து மரணத்தை ஏற்படுத்துமா..! சித்த மருத்துவர் பதில் என்ன.

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2020, 10:41 PM IST
Highlights

சித்தமருத்துவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக யாரோ இதுபோன்று,பெயரை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். கோரோஜன மாத்திரை சாப்பிட்டால் 'கொரோனா'வைரஸ் சரியாகாது என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.

T.Balamurukan

சித்தமருத்துவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக யாரோ இதுபோன்று,பெயரை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். கோரோஜன மாத்திரை சாப்பிட்டால் 'கொரோனா'வைரஸ் சரியாகாது என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.

டெங்கு காய்ச்சல்,சிக்கன் குன்யா போன்ற வைரஸ் காய்ச்சல் வந்தபோதெல்லாம் நமக்கு கைகொடுத்தது சித்தமருத்துவம் தான்.அதனால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலவேம்பு கசாயம் சித்தமருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று மட்டுமல்ல எந்த வைரஸ் தொற்றையும் விரட்டவும் சித்த மருத்துவத்தில் மருந்து இருப்பதாக சித்தவைத்திய மருத்துவர்கள் சவால்விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் தோன்றிய போதே தமிழ் மொழியும், தமிழ்சமூகமும் தோன்றியிருக்கிறது."காலதே முன்தோன்றி பிறந்த குடி தமிழ்குடி" என்றும் சித்தர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். தமிழ்சமூகம் தான் இந்த உலகின் மூத்த சமூகம் என்பதற்கு சித்த வைத்திய முறை சான்றுகளும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றன.

சித்தர்கள்,முனிவர்கள், எழுதிய சித்த வைத்திய மருந்துகளும்,வைத்திய முறையும் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு போனது என்பதில் மாற்று கருத்து இல்லை.எனவே தான் சித்த மருத்துவமுறையில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவ்வளவு சிறப்பு உள்ள சித்த மருத்து நூல்கள் எல்லாம் பல சித்தவைத்திய சாலைகள் இன்னும் பாதுகாத்து வருகிறார்கள். இவர்களைக் கொண்டே தமிழக அரசு அந்த நூல்களில் உள்ள மருத்துவ முறைகளை இன்னும் ஆய்வு செய்ய தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை சித்த மருத்துவர்களால் நீண்ட நாள் கோரிக்கையாக வைத்துவருகிறார்கள்.

சித்த மருத்துவ நூல்கள் நம் நாட்டின் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இதை பாதுகாக்காமல் விட்டால் திரும்ப எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் கிடைக்காதது. இந்த நிலையில், தமிழில் மொழியில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை சித்த வைத்திய நூல் ஒன்றில் கொரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் சில பக்கங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.பாக்கெட் வைத்தியம் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால்,கோரோசன என்ற சொல்லை கோரோன என்று  போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.இந்த மருந்துக்காகச் சேர்க்கப்படும் மருந்துப் பொருள்கள் எல்லாம் விராகநிடை  என்ற அளவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது (ஒரு விராகநிடை என்பது4.2கிராம் அளவு)

மிளகு விராகநிடை ஒன்றரை, லவுங்கம் விராகநிடை ஒன்றரை, ஜாதிக்காய் விராகநிடை ஒன்றரை, ஓமம் விராகநிடை ஒன்று, ஜாபத்திரி விராகநிடை ஒன்று, சித்திரமூலம் விராகநிடை ஒன்று, திப்பிலி விராகநிடை ஒன்றரை, கருஞ்சீரகம் விராகநிடை ஒன்று, கோஷ்டம் விராகநிடை ஒன்று, கோரோஜனை விராகநிடை இரண்டு,  நாவல் துளிர் விராகநிடை ஒன்று, மாந்துளிர் விராகநிடை ஒன்று, வேப்பங்கொழுந்து விராகநிடை ஒன்று, பூரம் விராகநிடை ஒன்று.இவைகளை உலர்த்தி யிடித்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து சாப்பிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நூலின் முதல் - தலைப்புப் பக்கத்தில் கைமுறை பாக்கெட் வயித்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இவை பூ.சு. துளசிங்கமுதலியாரால் ஏட்டுப் பிரதியும் கைமுறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று.இந்த நூலின் பிரதி யாரிடம் இருக்கிது என்று தெரியவில்லை.ஆனால் குறிப்பிட்ட இரு பக்கங்கள் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பகிரப்படுகின்றன.உள்ளபடியே நூல் இருப்பதும் நூலில் இருக்கும் தகவல்களும் சரியே. ஆனால், கோரோசன, கோரோன ஆக்கப்பட்டதும் அதைக் கொண்டுவந்து கொரோனாவுடன் சேர்த்ததும்தான் கோளாறு!.

கோரோஜன மருந்து: இந்த மருந்து "கோ" பசு மாடு என்பது பொருள். இந்த மாட்டில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருளைக்கொண்டு செய்யப்படும் மருந்து தான் இது. குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இந்த மருந்து சித்தமருத்துவத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்கவே இந்த மருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.இன்னும் கோரோஜன மருந்து நடைமுறையில் இருக்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மருந்து பொருள்களில் பூரம் என்கிற மருந்து சொல்லப்பட்டிருகிறது. பூரம், விசத்தன்மையுள்ளது. இந்த பூரத்தை சித்த மருத்துவர்கள் சித்திசெய்து அதை மருந்து பொருளாக மாற்றி கொடுப்பார்கள். பூரம் கிடைப்பது எளிதல்ல. அப்படியே கிடைத்தாலும் அதை அப்படியே சாப்பிட்டால் மரணம் கூட ஏற்படலாம் என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.

சித்தமருத்துவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக யாரோ இதுபோன்று பெயரை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். கோரோஜன மாத்திரை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் சரியாகாது என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.

click me!