கொரொனா காட்டு தீயை போல் பரவும் அபாயம் இருக்கிறது...பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2020, 8:37 PM IST
Highlights

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்றினார். மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.மருத்துவ மேம்பாட்டு வசதிக்காக 15000கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.காட்டு தீ போல் பரவும் அபாயம் ஏற்படும்  என அவர் எச்சரித்துள்ளார்.

T.Balamurukan

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்றினார். மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.மருத்துவ மேம்பாட்டு வசதிக்காக 15000கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.காட்டு தீ போல் பரவும் அபாயம் ஏற்படும்  என அவர் எச்சரித்துள்ளார்.

உலக அளவில் நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.  இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேரை தாண்டி விட்டது.
இதனால், தீவிரத்தை உணர்ந்ததால் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைச் செயல்படுத்திய பின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.அந்த உரையில்..,

மக்கள் ஊரடங்கின் மூலம் இந்திய மக்கள் கரோனா வைரஸை் எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது. எந்த தடை வந்தாலும் மனித குலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதன் மூலம் முழு அளவில் கொரோனாவுக்கு எதிராக நாம் போராட முடியும். அடுத்த 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கிராமபுறங்களிலும் இந்த ஊரடங்கு தொடரும்.வல்லரசு நாடுகளாலேயே கொரொனா பாதிப்பை தடுக்க முடியவில்லை.அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்து இருக்க வேண்டும்.இந்தியாவை காப்பாற்ற ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

click me!