கொரோனா பற்றி நமக்கு தெரியாத "ரிப்போர்ட்"...!

By ezhil mozhiFirst Published Mar 9, 2020, 1:24 PM IST
Highlights

சுவாச கோளாறு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இது தவிர உடலில் நீர் பற்றாக்குறை வராமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது, எந்த ஒரு வைரசையும் நாம் எதிர்கொள்ள முடியும். 

கொரோனா பற்றி நமக்கு தெரியாத "ரிப்போர்ட்"...! 

நாடு முழுக்க பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே சற்று அமைதியாக உள்ளது போல தோன்றுகிறது அல்லவா..? அப்படிபட்ட கொரோனா  வைரஸ் பற்றி நமக்கு இதுவரை தெரியாத சில விஷயங்கள் இதோ...

உலக சுகாதார நிறுவனமும் சீனாவும் இணைந்த கூட்டமைப்பு நடத்திய ஆய்வின் படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44000 பேரின் ரிப்போர்ட் வைத்து சோதனை செய்த போது ..

காய்ச்சல் 

நோய் பாதித்த 88%பேருக்கு  காய்ச்சல் தான்  சாதாரண அறிகுறியாக இருந்தது. 

வரட்டு இருமல் 

நோய் பாதித்த 68% பேருக்கு ஏற்பட்ட வறட்டு இருமல் தான் அடுத்த அறிகுறியே 

அதீத உடல் சோர்வு 

3 ஆவது முக்கிய அறிகுறி நோய் பாதித்த 38% பேருக்கு உடல் சோர்வு காணப்பட்டது 

4. இருமலுடன் சளி வருவது (Sputum production) - 33.4% பேர் 

5.மூச்சு விடுவதில் சிரமம் - 18% பேர் 

6. மூட்டுக்கு மூட்டு வலி -15% பேர் 

7. தொண்டை வலி - 13.6% 

8.குளிர் நடுக்கம் - 11.4% 

9. வாந்தி மற்றும் குமட்டல் - 5%  

10.மூக்கடைப்பு/ஒழுகுதல்- 5% 

11. பேதி / வயிற்றுப்போக்கு  - 4% 

12. இருமும் போது சளியில் ரத்தம் வருவது - ஒரு சதவீதத்திற்கும் குறைவான எண்ணைக்கையில் தான் பதிவாகி உள்ளது. 

இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், மீள முடியாது என்றெல்லாம் கிடையாது. நோய்  எதிர்ப்பு தன்மை அதிகம் உள்ள நபர்கள் பெருமளவில் பாதிப்படைய வாய்ப்பு குறைவே. மேலும்  எந்த ஒரு வைரஸ் தாக்கம் இருந்தாலும் நல்ல உணவு முறையை எடுத்துக்கொண்டு....சுவாச கோளாறு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இது தவிர உடலில் நீர் பற்றாக்குறை வராமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது, எந்த ஒரு வைரசையும் நாம் எதிர்கொள்ள முடியும். 

click me!