வேலூர் மக்களுக்கு இன்று முதல் ஆப்பு..! உஷார் ..!

By ezhil mozhiFirst Published Aug 29, 2019, 1:24 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு  சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மக்களுக்கு இன்று முதல் ஆப்பு..!  உஷார் ..! 

சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு  சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இரு சக்கர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் கட்டாயம் அபராதம் ஆயிரம் ரூபாய் என விதிக்கப்படுகிறது.

இருவர் செல்லும் போது பின்புறத்தில் அமரும் நபரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் குறைந்தது 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவது கட்டாயமாகி உள்ளது. இந்த நிலையில் வெளி மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னையில் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த முறையை  விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கையை அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!