Winter Hair Care Mistakes : குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க செய்யக்கூடாத தவறுகள் மற்றும் முடியை பராமரிப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
குளிர்காலத்தில் பல தொற்று நோய்கள் நம்மை தாக்கும். எனவே இந்த பருவத்தில் நம்முடைய ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியம் அதுமட்டுமின்றி, சருமத்தையும் கவனித்து கொள்ள வேண்டும். இதனுடன் தலைமுடிக்கும் கூடுதல் கவனிப்பு தேவை. குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று காரணமாக முடி சேதமடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் முடி வறண்டு போகும் மற்றும் உயிரற்றதாக மாறத் தொடங்கும்.
இதனால் பல தலைக்கு ஹேர் பேக் மற்றும் விலை உயர்ந்த ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதையும் தவிர தலைமுடிக்கு அதிக கவனம் தேவை. ஆனால் இது முடிக்கு மிகவும் சேதத்தை தான் ஏற்படுத்தும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்கும் இது தவிர முடியின் முனைப் பகுதியில் பிளவு பிரச்சனையும் ஏற்படும். எனவே இது போன்ற தவறுகளை நீங்கள் தவிர்ப்பது தான் நல்லது. இத்தகைய சூழ்நிலையில் குளிர்காலத்தில் முடி பராமரிப்பு தொடர்பான செய்யக்கூடாத சில தவறுகள் மற்றும் தலை முடியை பராமரிப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் முடி பராமரிப்பில் செய்யக்கூடாது தவறுகள்:
தலை முடிக்கு வெண்ணீர் பயன்படுத்தாதே!
குளிர்கால குளிர்ச்சி தவிர்க்க பொதுவாக நாம் அனைவரும் வெந்நீரில் குளிப்பது வழக்கம்.மேலும் பலர் தலைமுடிக்கு கூட சூடான நீரை பயன்படுத்துவார்கள். ஆனால் அது தவறு. தலை முடிக்கு வெந்நீர் பயன்படுத்தினால் அது முடியை சேதப்படுத்திவிடும் மற்றும் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்யை அகற்றி விடும். இதனால் முடி வறண்டு காணப்படும். அதுமட்டுமின்றி, தலைமுடிக்கு சூடான நீர் பயன்படுத்துவதால் உச்சந்தலையில் துளைகள் திறக்கும் இதனால் முடியின் வேர்கள் வலுவிழுந்து முடி உதிர்தல் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும். மொத்தத்தில் சூடானது தலைமுடியை உயிரற்றதாக்கிவிடும்.
இதையும் படிங்க: முடி நீளமா வளர.. சின்ன வெங்காயத்தோட இந்த '1' எண்ணெய் சேர்த்து தேய்ச்சு பாருங்க!!
ஈரத்தலையுடன் சீவுதல்:
தலைக்கு குளித்த பிறகு நம்மில் பலர் தலைமுடியை ஈரத்துடன் சீவுவது பழக்கமாக்கி உள்ளோம். ஆனால் அது தவறு இப்படி செய்தால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். தலைமுடி நன்கு காய்ந்த பிறகு தான் சீவ வேண்டும். இதனால் முடிக்கு எந்த பிரச்சனையும் வராது. மேலும் முடி வலுவாகவும் இருக்கும்.
ஹேர் டிரையர் பயன்படுத்தாதே!
நம்மில் பெரும்பாலானோர் முடி ஈரமாக இருந்தால் அதை உடனே காய வைப்பதற்காக ஹேர் டிரையர் பயன்படுத்துவோம். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் இதை அதிகம் பயன்படுத்துவோம். ஆனால் இது தலை முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா? எனவே குளிர்காலம் அல்லது கோடை காலம் எந்த பருவ காலத்திலும் தலைமுடியை இயற்கை முறையில் தான் காய வைக்க வேண்டும். இல்லையெனில் முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: குளிர் காலத்தில் தலைமுடிக்கு சூடான எண்ணெய் மசாஜ்; இத்தனை நன்மைகளா?!
தலைக்கு குளிக்காமல் இருப்பது:
குளிர்காலத்தில் ரொம்பவே குளிர்ச்சியாக இருக்கும். அதுவும் குறிப்பாக தண்ணீர் ரொம்பவே குளிர்ந்து இருப்பதால் தலைக்கு குளிப்பதை நம்மில் சிலர் தவிர்த்து விடுவோம். இதன் காரணமாக உச்சந்தலையில் அழுக்குகள் குவிய ஆரம்பிக்கும். இதனால் பொடுகு பிரச்சனை வர ஆரம்பிக்கும். எனவே குளிர்காலத்தில் கண்டிப்பாக வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்க வேண்டும்.
அதிகப்படியான ஷாம்புவை பயன்படுத்துதல்:
குளிர்கால பொடுகு பிரச்சனையை போக்க பலவிதமான ஷாம்புகளை பயன்படுத்துவார்கள். ஷாம்புவில் ரசாயனங்கள் அதிகமாக இருப்பதால் அதனால் முடி வலுவிழந்து போகும் மற்றும் பொடுகு தொல்லை வர ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக பலர் தலைமுடிக்கு அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவதால், இதனால் தலைமுடி தான் அதிகமாக பாதிக்கப்படும். எனவே தலை முடிக்கு எப்போதுமே லேசான ஷாம்புவை மட்டுமே பயன்படுத்துங்கள். மேலும் ஷாம்புவை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தலைமுடிக்கு ஷாம்புவை அதிகமாக பயன்படுத்தினால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும் மற்றும் தலையில் இருக்கும் இயற்கை எண்ணெய் இழந்து விடுவீர்கள். இது தவிர தலைமுடியும் வறண்டு போகும்.
குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி?
- குளிர்காலத்தில் கூந்தலுக்கு ஈரப்பதம் அதிகை தேவை என்பதால் வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து நல்ல மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் தலை முடியின் வேர்கள் பலப்படும் மற்றும் தலைமுடியும் பளபளப்பாக இருக்கும்
- குளிர்ந்த காய்ச்சல் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்க விரும்பினால் தலைக்கு தொப்பி அல்லது ஏதாவது ஷால் கொண்டு மூடுவது மிகவும் நல்லது. குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் முடி பாதுகாக்கப்படும்.
- அதுபோல வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துங்கள். மேலும் முடியில் ஈரப்பதத்தை தக்க வைக்க ஹேர் கண்டிஷனரையும் பயன்படுத்துங்கள்.
- குளிர்காலத்தில் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். இதற்கு நீங்கள் வாழைப்பழம் அல்லது கற்றாழை போன்றவற்றை ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம்.
- முக்கியமாக முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் ஆரோக்கியமான உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வைட்டமின் ஈ, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.