இதுவரை உங்களுக்கு தெரியாத ஒன்று...தேங்காய் எண்ணெய் "பேஸ்வாஷ்"...! சும்மா மிளிரும் பாருங்க..!

 
Published : Jun 08, 2018, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
இதுவரை உங்களுக்கு தெரியாத ஒன்று...தேங்காய் எண்ணெய் "பேஸ்வாஷ்"...! சும்மா மிளிரும் பாருங்க..!

சுருக்கம்

coconut facewash is the best one for the skin

தேங்காய் எண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது நமக்கு தெரிந்த ஒன்ப்ரே..ஆனால் அதனை முறையாக பயன்படுத்துகிறோமா என்று யோசித்தால்...பதில் என்னமோ இல்லை என்பது தான் அல்லவா..?

பொதுவாகவே கேரள மாநிலத்தவர்கள் தேங்காய் எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்துவார்கள்..அதனால் தான் அவர்களுடைய கூந்தல் கருமையாக நல்ல பொலிவுடன் காணப்படும்...

அதே போன்று, சமைப்பதிலும் அதிக தேங்காய் எண்ணெய் மட்டுமே  பயன்படுத்துவார்கள்.... அதனால் தான் அவர்களுடைய சருமத்தில் எந்த விதமான வறட்சியும் காணப்படாது...அதே போன்று அவர்களின் சருமம் பளப்பாக மாறி விடும்...

பொதுவாகவே நம் முகத்தில் சுருக்கம் காணப்படுவது, கரும்புள்ளி தோன்றுவது, பருக்கள் அதிகரிப்பது என பல பிரச்சனைகள் உண்டு.. இவை அனைத்தும் பெண்களுக்கு மட்டும் இல்லை..ஆண்களுக்கும்  வருவது உண்டு...

இதனை தடுக்க தேங்காய் எண்ணெய் பேஷ்வாஷ் பயன்படுத்காலாம்.. இதனை எப்படி தயாரிக்க வேண்டும் என தெரியுமா..?

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் 
தேயிலை மர எண்ணெய் - 3 துளிகள் 
லாவெண்டர் எண்ணெய் - 2 துளிகள் 
தேன் - 1 டீஸ்பூன்

இவை அனைத்தையும் நன்றாக கலந்துக்கொண்டு முகத்தில் தேய்த்து  வர வேண்டும்.. சில நபர்களுக்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக  காணப்பட்டால், இந்த எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சை  சேர்ந்துக்கொள்ளவும்.

இந்த எண்ணெய் கொண்டு அரை மணி நேரம் பேஸ்வாஷ் கொண்டு மசாஜ் செய்து, பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

வாரம் மூன்று முதல் நான்கு முறை செய்து வந்தால் சருமம் பொலிவடையும்....

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்