தக்க சமயத்தில் உதவி செய்த "TATA "..! அடுத்த நிமிடமே நன்றி தெரிவித்த முதல்வர் எடப்பாடி..!

By ezhil mozhiFirst Published Apr 15, 2020, 5:24 PM IST
Highlights
கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். கருவிகளை தமிழக அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நிவாரண நிதியாக டாட்டா சன்ஸ் நிறுவனம் மற்றும் டாட்டா ட்ரஸ்ட் சார்பில் ரூ.1500 கோடி நிதியுதவியை அளித்து உள்ளது டாடா நிறுவனம் 
தக்க சமயத்தில் உதவி செய்த "TATA "..! அடுத்த நிமிடமே நன்றி தெரிவித்த முதல்வர் எடப்பாடி..! 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 1,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 38,139 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 15,502 பேருக்கு பரிசோதனைகள்


மற்றொரு பக்கம் ஒரு லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது என தமிழக  அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் டெஸ்ட் கிட்டுகள் தமிழகம்  வந்து சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். கருவிகளை தமிழக அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நிவாரண நிதியாக டாட்டா சன்ஸ் நிறுவனம் மற்றும் டாட்டா ட்ரஸ்ட் சார்பில் ரூ.1500 கோடி நிதியுதவியை அளித்து உள்ளது டாடா நிறுவனம். 


மேலும் கேரளாவில் மிக விரைவில் கேரளாவில் ஒரு கிராமத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதர்களாகவே   ஒர்  மருத்துவமனை கட்ட முடிவு செய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ATOS, HYUNDAI,IOB வங்கி  ஊழியர்கள் என பெரும் நிறுவனமும் நடிகர் அஜித், சிவகார்த்திகேயன் என பிரபலங்களும் முதலமைச்சரின் கொரோனாவிற்கு எதிரான பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டதொகை மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து  54 ஆயிரத்து 364 ரூபாய் ஆகும். 


இதனையொட்டி, நிவாரணம் வழங்கிய நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் முதல்வர் மனமார்ந்த நன்றி தெரிவித்து உள்ளார். 
click me!