கொரோனா பற்றி முதல் " Good News"...! சீன மக்கள் கொடியேந்தி கொண்டாட்டம்..!

By ezhil mozhiFirst Published Mar 10, 2020, 6:39 PM IST
Highlights

ஹுவாங் மாகாணத்தில் வாழக்கூடிய 5 கோடி மக்கள் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லாதவாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. உலக அளவில் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 

கொரோனா பற்றி முதல் " குட் news "...!  சீன மக்கள் கொடியேந்தி கொண்டாட்டம்..! 

சீனாவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருத்துவமனைகள் மூடப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ள செய்தி அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஹுவாங் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சீனாவில் குறிப்பாக படுவேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. அந்த வகையில் நிலைமையை சமாளிக்க வெறும் 10 நாட்களிலேயே 15 அவசர சிகிச்சை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 44 ஆயிரத்து 518 பேர் காப்பாற்றப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்  3 ஆயிரத்து 136 பேர் பலியாகி உள்ளனர்.

ஹுவாங் மாகாணத்தில் வாழக்கூடிய 5 கோடி மக்கள் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லாதவாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. உலக அளவில் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த ஒரு நிலையில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட 15 மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஒரு வாரத்தில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மருத்துவமனையும் விரைவில் மூடப்படும் என சீன அரசு அறிவித்துள்ளதால், சீன மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது 

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதாகவும் இத்தனை படுக்கை அறை கொண்ட மருத்துவமனைகள் தேவையில்லை என்றும் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த ஒரு செய்தி கொரோனா வைரஸ் குறித்த முதல் நல்ல செய்தி என அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து நாட்டு கொடிகளை கையில் ஏந்தி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!