பெற்றோர்களே உஷார்..! தண்டனை உங்களுக்கு தான்..! 18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளிக்க அதிரடி தடை..!

By ezhil mozhiFirst Published Feb 2, 2019, 3:02 PM IST
Highlights

சிறுவர்கள் மெரினா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை முடிவு செய்து உள்ளது.

18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளிக்க அதிரடி தடை..! காரணம் என்ன தெரியுமா..?

சிறுவர்கள் மெரினா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை முடிவு செய்து உள்ளது.யாருக்கு தான் பீச்சுக்கு சென்றால் குளிக்க தோன்றாது..? அதுவும் சிறுவர்கள் என்றால் சொல்லவே இல்லை...ஓடி சென்று கடலில் குளிக்க ஆசைப்படுவார்கள்..

அவ்வாறு குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக சிறுவர்கள் தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாமல் சமீபத்திய காலங்களில் அது போன்ற நிகழ்வு அடிக்கடி நடப்பதை பார்க்க முடிகிறது அல்லவா? இதனை எல்லாம் தடுக்கும் பொருட்டு, 18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினா கடலில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தடையை மீறி தங்களது பிள்ளைகளை கடலில் குளிக்க அனுமதி அளித்தால், பெற்றோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே சமயத்தில், சிறுவர்களை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் கடற்கரைக்கு வரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

click me!