
விசாவில் அதிரடி மாற்றம் ....!!! ஐடி துறையினருக்கு பெரும் ஆப்பு ....!!!
இங்கிலாந்து செல்ல விசா பெற வேண்டும் என்றால், நவம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு விசாவுக்கு விண்ணப்பிக்கும், நிறுவன ஊழியர்களின் சம்பள விகிதம் 30 ஆயிரம் பவுண்டுகளாக உயர்த்தப் பட்டுள்ளது. ஆனால் தற்போது 20,800 பவுண்டுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது {அதாவது டயர் 2 நிறுவனங்களிடையே பணி மாற்ற விசா – ஐசிடி}
பொதுவாக ஐசிடி முறையிலான விசாவை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறது. அதாவது 90 சதவீத விசாக்கள் ஐடி துறையினர் பயன்படுத்துவதாக தெரிகிறது.
விசாவின் கொள்கைகள் :
நவம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே புதிய விசா கொள்கை (ஐசிடி) பொருந்தும்.
இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்து மேலும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில் குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக புதிய ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது ( IELTS)
இந்த டயர் 2 பொது பிரிவில் அனுபவம் மிக்க பணியாளர்களின் ஊதிய விகிதம் 25 ஆயிரம் பவுண்டு களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டதாரி பயிற்சியாளர்கள் ஊதிய விகிதம் 23 ஆயிரம் பவுண்டுகளாகும்.
இதன்படி, ஒரு நிறுவனம் ஓராண்டுக்கு 20 பணியாளர்கள் வரை நிரப்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
டயர் 2 நிறுவனங்களிடையே பணி மாற்ற விசா – ஐசிடி ....(புதிய மாற்றம் வந்துள்ளது )
இங்கிலாந்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக எம்ஏசி கடந்த ஆண்டு சில பரிந்துரைகளை அளித்தது. இதன் தொடர்ச்சியாக, இங்குலாந்து விசா பெறுவதில்,இத்தனை மாற்றம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.....
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.