31 ஆம் தேதி "பூரண சந்திர கிரகணம்"..! இந்நாளில் "இதை" செய்தால்...

 
Published : Jan 29, 2018, 06:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
31 ஆம் தேதி "பூரண சந்திர கிரகணம்"..! இந்நாளில் "இதை" செய்தால்...

சுருக்கம்

CHANDRA GIRAGANAM IS ON 31 JAN

31 ஆம் தேதி "பூரண சந்திர கிரகணம்"..! இந்நாளில் "இதை" செய்தால்....

பகவான் ஸ்ரீமந் நாராயணனின் இரு திவ்ய நேத்ரங்களில் ஒருவரகாவும், நவகிரகங்களில் மனோகாரகர் என போற்றப்படும் சந்திரனுக்கு தை மாதம் 18 ஆம் தேதியான, நாளை  மறுதினம் புதன்கிழமை அன்று பவுர்ணமி தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

அதன்படி,

பூசம் - ஆயில்யம் (1 -ஆம் பாதம் ) கடக ராசியில் ராகு க்ரஸ்த  சந்திர  கிரகணம்  நிகழ  உள்ளது.

சந்திர கிரகணம்

ஆரம்பம் -மாலை 5.17

 மத்திமம் -இரவு 6.59

முடிவு - இரவு  8.41

புனர்பூசம்,பூசம்,ஆயில்யம், மகம், அனுஷம்,கேட்டை,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது

சந்திர கிரகணம் விடும் போது தர்ப்பணம் செய்ய வேண்டுமாம்...

இரவு 8 மணிக்கு பித்ரு தர்ப்பணம்

பகல் போஜனம் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சந்திர சாயை  படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டில், மிக முக்கிய நாட்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது...

அந்த வகையில் இன்று பிரதோஷம் மற்றும் நாளை மறுதினம் சந்திர கிரகணம் என  தொடர்கிறது.

மறவாமல் இந்த நட்சத்திரகாரர்கள் பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்