
ஒரு காஃபி விலை ரூ.1600 ..! பூனையின் "கக்கா" தான் காப்பி கொட்டை..! அருந்த அலைமோதும் மக்கள்..!
இந்தோனேசியாவில் உள்ள பூனை போன்ற ஒரு விலங்கின் கழிவில் தயாரிக்கப்படும் காஃபி உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படுகிறது
பொதுவாகவ காலை மாலை என இரு வேளையும் பால், டீ அல்லது கிரீன் டீ அல்லது பிளாக் டீ என எதையோ அருந்துவது வழக்கம்
ஆனால் இந்தோனேசியாவில் உள்ள இந்த அற்புத விலங்கு காஃபி கொட்டையை உண்டு பின்னர் அது கழிக்கும் கழிவை வைத்து காஃபி தயாரிக்கபடுகிறது.
இது பல நன்மைகளை கொண்டதாக உள்ளது என்றும், இதில் தயாரிக்கப்படும் காபியை அருந்தினால், நம்முடைய சருமம் பளபளப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
கொச்சி,கேரளா
இது இந்தோனேசியாவில் கிடைத்தாலும், உலகம் முழுவதும் இதற்கான தட்டுப்பாடு அதிகம். ஆனால் இதனை கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள காபி ஷாப்பில் விற்கப்படுகிறது
ஒரு காபி விலை ரூ.1600... வாய் பிளக்க வேண்டாம். இந்த காபியை அருந்த பலரும் போட்டி போட்டுக்கொண்டு வந்து அருந்துகின்றனர்
மாதத்திற்கு 4 கிலோ கிடைப்பதே அரிதாம்...
அதாவது இந்த கேட் வெளியேற்றும் கழிவுகள் மாதத்திற்கு ஒரு நான்கு கிலோ மட்டும் தான் தேறுமாம்...அதனால் அதிக டிமாண்ட் உள்ளது
காபி லுவாக் (kopi luwak )
kopi luwak என அழைக்கப்படும் இந்த காஃபிகொட்டை....அதாவது பூனை வெளியேற்றும் கழிவை சேகரித்து அதனை காய வைத்து காபி லுவாக் என்ற பெயரில் விற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் காப்பி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.