
அதிகரிக்கும் உணவு பழக்கம்,புகை,மாசுபாடு காரணமாக கேன்சர் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கேன்சர் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி கேன்சர் நோயினை கண்டறியவும் இந்நோய்க்கான சிகிச்சைகளும் அதிகம் செலவை ஏற்படுத்துகிறது.
கேன்சர் தொடர்பான சோதனைகளுக்கு பெரிய ஆராய்ச்சி கூடங்களையே மக்கள் நாட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் தற்போது கேன்சர் நோயைக் கண்டறியும் சுலபமான வழி முறையை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினை நம்முடைய ஸ்மார்ட் ஃபோனுடன் இணைத்து நம்மால் வீட்டிலேயே குறைந்த செலவில் கேன்சர் நோயினை கண்டறிய முடியும்.
இந்த வழிமுறையின் மூலம் ஆய்வுக்கூடங்களின் தரத்திற்கு நிகராக கேன்சர் நோயின் பாதிப்பு குறித்த முடிவுகளை தெரிந்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.